இந்த திலகத்தினுடைய பெயரை அஞ்சனமை என்று சொல்வார்கள். அந்த அஞ்சனமை யை நம்முடைய வீட்டிலேயே சுலபமான முறையில் எப்படி தயார் செய்வது என்பதைப்பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
இதற்குத் தேவையான பொருட்கள் புல், வைக்கோல், தர்ப்பைப்புல், அருகம்புல், வெட்டிவேர், இந்த ஐந்து பொருட்களையும் தயாராக சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு இதை எரித்து சாம்பலாக்குவதற்கு ஒரு சூடம் தேவைப்படும். தயாராக எடுத்து வைத்திருக்கும் இந்த ஐந்து பொருட்களையும் ஒவ்வொரு கைப்பிடி அளவு ஒரு இரும்பு பேசனிலோ அல்லது வேறு ஏதாவது பாத்திரத்திலோ போட்டு சூடத்தை வைத்து கொளுத்தி நன்றாக சாம்பலாக்கி கொள்ளவேண்டும்.
எல்லா பொருட்களும் பொசுங்கி கொஞ்சமாக கருப்பு நிறத்தில் நமக்கு சாம்பல் கிடைக்கும் அல்லவா.
அதை சேகரித்து ஒரு சிறிய பிளாஸ்டிக் டப்பாவிலோ, எவர்சில்வர் டப்பாவிலோ போட்டு கொஞ்சமாக விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி குழைத்து இதை மை போல தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
இதை அப்படியே நெற்றியில் இட்டுக் கொண்டாலும் சரி அல்லது இதோடு கொஞ்சம் கண் மையை கலந்து மை போலவே தயார் செய்து அதை நம்முடைய நெற்றியில் இட்டு வந்தாலும் சரி. நம்மிடம் இருக்கும் துரதிர்ஷ்டம் குறையும்.
எதை தொட்டாலும் தோல்வி என்ற நிலை மாறி நிறைய நன்மைகளை நமக்கு கொடுக்க இந்த மையை நமக்கு உறுதுணையாக இருக்கும். இந்த மையை முறையாக எப்படி பயன்படுத்துவது.
இந்த மையை தயார் செய்து பூஜை அறையில் வைத்து விட்டு தீபம் ஏற்றி குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அதன் பின்பு இந்த மையை எடுத்து தனியாக சுத்தமான ஒரு இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
காலையில் எழுந்து குளித்துவிட்டு குலதெய்வத்தின் பெயரைச் சொல்லி விட்டு இந்த மையை எடுத்து உங்களுடைய நெற்றியில் இட்டுக் கொள்ளலாம்.
இந்த திலகத்தின் நிறம் கருப்பாக உள்ளது நெற்றியில் இட்டுக் கொள்ள சவுகரியமாக இல்லை என்பவர்கள் உச்சந்தலையிலும் இந்த மையை இட்டுக் கொண்டு வெளியே செல்லலாம்.
நாற்பத்தி எட்டு நாட்கள் தொடர்ந்து இந்த மையை உங்களுடைய நெற்றியில் இட்டு வாருங்கள். நிச்சயமாக துரதிர்ஷ்டசாலிகளாக இருக்கும் நீங்கள் அடுத்தவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு அதிர்ஷ்டசாலியாக மாறுவீர்கள்.