உலகில் வாழும் மனிதர்கள் அனைவரும் ஒருவருடன் ஒருவர் தொடர்பை கட்டாயம் பேண வேண்டிய தேவை உள்ளது. ஏன் என்றால் மனிதன் ஒரு சமூக பிராணி ஆவான். அப்படி இருக்க ஆண் , பெண் இருவரும் மிகவும் முக்கிய விடயங்கள் ,ஏன் ரகசியங்களை கூட தமக்குள் பகிர்ந்து கொள்கின்றனர்.
ஆனால் அவ்வாறு பகிரப்படும் விடயங்கள் தொடர்பில் சிலவற்றை நாம் பிறரிடம் பகிராமல் இருப்பது வாழ்வில் பெரியளவிலான மாற்றங்களை உண்டாக்கும் . பகிர்வதனால் குறிப்பாக கண்திருஷ்டியை உண்டாக்க வல்லது. இந்த கண் திருஷ்டியானது மிகவும் ஆபத்தான சூழலை உருவாக்கும்.
ஒருவர் மற்றவருடன் தன் கஷ்டங்களை பகிர்ந்து கொள்ளலாம் ஏன் என்றால் அது அவரின் மனதில் உள்ள பாரங்களை நீக்க வல்லது ஆனால் ஒருவர் அளவு கடந்த மகிழ்ச்சி, அதிஷ்டம்,உயர்பொருளாதார நிலை , வீண் பொய் தற்பெருமை பேச்சு ,புது முயற்சி , பணம் , ஆரோக்கியம், மிதமிஞ்சிய உணவுநிலை , தான் செய்யும் தான தர்மங்கள் ,தான் பேணும் சிக்கனம் இவற்றை எல்லாம் பிறருடன் பகிரவே கூடாது.
மகிழ்ச்சி , எமக்கு கிடைக்கும் அதிஷ்டங்களை பிறருடன் பகிரும் போது அது கிடைக்காதவர் அதை பற்றி ஏக்கம் கொள்ள நேரிடும் இடத்தில் அது நமக்கு பெரும் துன்பத்தை உண்டாக்கும்.
ஒருவர் தனது பொருளாதார நிலையை பற்றியும் தான் அதிகமாக உழைப்பதாகவும் பிறருடன் கலந்துரையாடும் போது அவருக்கு மாறாக உழைப்பவருக்கு மிக வேதனையை உண்டாக்கும்.
ஒருவர் தன்னை பற்றியும் தன் குடும்ப நிலை பற்றி உயர்வாக பொய் பெருமை பேசும் இடத்தில் அவருக்கான உண்மை நிலையிலும் அது பாதிப்பை உண்டாக்கும்
புது முயற்சி ஒருவர் எடுக்கும் போது தனது குடும்பத்தை சார்ந்தவரை தவிர்த்து ஏனையவர்களுடன் தனது முயற்சிகளை கூறுவது நல்லதில்லை
இவ்வாறான விடயங்களை சொல்லாமல் தவிர்ப்பது மிக நல்லது ஆகும்.