அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா (Barack Obama) Netflix தயாரிப்பில் வெளிவரும் புதிய ஆவணத் தொடரில் தோன்றவிருக்கிறார்.
‘Working: What We Do All Day’ எனும் தலைப்புகொண்ட இத்தொடரில் அமெரிக்கர்களின் வாழ்க்கையில் வேலையின் பங்கை ஆராய்கின்றது.
இந்தத் தொடரின் சிறிய காணொளியை, Netflix நேற்று (27) வெளியிட்டுள்ளது. அதை பராக் ஒபாமா, தனது Twitter பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அமெரிக்கர்களின் வேலைகளையும் எதிர்காலத்துக்கான கனவுகளையும் புரிந்துகொள்ள பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களிடம் பேசியதாக அவர் கூறினார்.
இந்தத் தொடரில் ஒபாமாவின் அணுகுமுறை, அமெரிக்காவின் செல்வாக்குமிக்க எழுத்தாளர் ஸ்டட்ஸ் தெர்கல் (Studs Terkel) எழுதிய “Working” எனும் புத்தகத்தைப் பின்பற்றி ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
மூலம் : AFP