September 21, 2023 1:35 pm

வடக்கு, கிழக்கில் வெப்பம் மேலும் அதிகரிப்பு!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மொனராகலை மாவட்டத்திலும் அதிகரித்த வெப்பம் நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம், மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்குட்பட்ட சில இடங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளையில், இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுகின்றது என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்