June 5, 2023 10:16 am

தையிட்டியில் கைதான 9 பேருக்கும் பிணை!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு – தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் உள்ளிட்ட 9 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் நேற்று இரண்டாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்ட போது, போராட்டம் நடத்த நீதிமன்றம் தடை விதித்துள்ளது என்று தெரிவித்து, பொலிஸார், போராட்டக்காரர்களைக் கைது செய்ததோடு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனைப் பலவந்தமாகத் தூக்கிச் சென்றனர்.

இந்நிலையில், நேற்று கைது செய்யப்பட்ட சுகாஷ் உள்ளிட்ட 9 பேரையும் மல்லாகம் நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர்படுத்தினர்.

இதன்போது கைதானவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸார் கோரிய போதும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணிகள் அதை எதிர்த்தனர்.

இதையடுத்து இன்று பிற்பகல் 2.30 மணிக்குக் கட்டளையைப் பிறப்பிப்பதாக நீதிவான் அறிவித்திருந்தார்.

அதற்கமைய இன்று பிற்பகல் 2.30 மணிக்கு மீண்டும் வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது, கைதானவர்களைப் பிணையில் விடுவித்து நீதிவான் உத்தரவிட்டார். அத்துடன் ஜனநாயக ரீதியிலான போராட்டங்களைத் தடுக்க முடியாது என்றும் நீதிவான் உத்தரவிட்டார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்