இங்கிலாந்தில் பஞ்சம் தலையெடுக்க ஆரம்பித்துள்ளதாக புதிய ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி ஆய்வுகள் நிறுவனம் (IDS) நடத்திய ஆய்விலேயே இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 14 சதவீதமான இங்கிலாந்து மக்கள் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
இங்கிலாந்து கடும் பொருளாதார நெருக்கடியில் தற்போது சிக்கித் தவித்து வரும் நிலையில், இலட்சக்கணக்கான மக்கள் உணவின்றி பட்டினியில் வாடி வருகின்றனர் எனக் குறிப்பிடப்படுகின்றது.
இங்கிலாந்து மக்களிடையே சமத்துவம் இன்மை மிக அதிகம் உள்ளதாகவும், தொண்டு நிறுவனங்கள் இதை சரிசெய்ய 10 ஆண்டுகளாக முயற்சித்தும் இதற்கு தீர்வு கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
2022 செப்டெம்பர் புள்ளிவிவரத்தின் படி, இங்கிலாந்தில் 7 பேரில் ஒருவர் பட்டினிக்கு ஆளாவதாக தெரியவந்துள்ளது.
ஒட்டுமொத்த இங்கிலாந்து மக்கள் தொகையில் 7 சதவீதம் பேர் தொண்டு அமைப்புகளையே உணவுக்காக சர்ந்து இருப்பதாக குறித்த புள்ளிவிவரம் சுட்டிக்காட்டுகிறது.