பெய்ரூட் வெடிப்பு மூன்று கட்டங்களாக விசாரணை!

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணைகளை மூன்று கட்டங்களுக்கு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

லெபனான் ஜனாதிபதி Michel Aoun இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லெபனான் தலைநகா் பெய்ரூட்டில் கடந்த 4 ஆம் திகதி இடம்பெற்ற பாரிய வெடிப்பு சம்பவத்தின் காரணமாக இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 180 ஆக உயர்வடைந்துள்ளதுடன் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து குறித்த வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணகளை 3 கட்டங்களாக உட்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லெபனான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

குறித்த விசாரணைகளில்  சர்வதேச புலனாய்வாளர்களுடன்,  அமெரிக்க புலனாய்வு விசாரணைப் பிரிவான FBI இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர்