செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு வறட்சி எச்சரிக்கை

இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு வறட்சி எச்சரிக்கை

1 minutes read

இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு வறட்சி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதத்துக்குப் பின்னர் இங்கிலாந்தின் சில பகுதிகளில் கடும் வறட்சி ஆபத்து ஏற்பட்டுள்ளதாக, அந்நாட்டு விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

எதிர்வரும் மாதங்களில் நீடித்த மழை வீழ்ச்சி இல்லாமல், தென்மேற்கு இங்கிலாந்து மற்றும் கிழக்கு இங்கிலாந்து ஆகியன வறட்சி அபாயத்தில் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

இங்கிலாந்தில் கடந்த 30 ஆண்டுகளில் கடந்த பெப்ரவரி மாதமே மிகவும் வறண்ட மாதமாக இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் சில பகுதிகளில் உள்ள ஆறுகள் பெப்ரவரி மாதத்தில் மிகக் குறைந்த அளவிலேயே ஓடியதாக இங்கிலாந்தின் சுற்றுச்சூழல் மற்றும் நீரியல் மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்திலும் கடந்த மாதம் மழை குறைவாக இருந்துள்ளது. வேல்ஸில் சராசரியாக 22% மட்டுமே மழை காணப்பட்டது.

கடந்த வருட கோடை காலத்திலும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வறட்சி அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்போது விவசாயிகள் பயிர்களை இழந்ததுடன், சில வன விலங்குகளும் இறந்தன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.