March 24, 2023 3:20 am

அவசர எச்சரிக்கைகள் கையடக்கத் தொலைபேசிக்கு வரும்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
அவசர எச்சரிக்கைகள் கையடக்கத் தொலைபேசி

இங்கிலாந்தில் அவசர பொது எச்சரிக்கைகளை பொதுமக்கள் அனைவரதும் கையடக்கத் தொலைபேசிக்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

வெள்ளம் அல்லது காட்டுத்தீ போன்ற உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளில், பொதுமக்களை எச்சரிக்கும் அவசர செய்திகளை அனுப்ப இத்ட்டம் அரசாங்கத்தையும் அவசர சேவைகளையும் அனுமதிக்கிறது.

இதையும் பாருங்க – இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு வறட்சி எச்சரிக்கை

இங்கிலாந்தின் வருடாந்த வெள்ள சேதம் அதிகரிக்கும் அபாயம்

இந்நடவடிக்கையின் முதற்கட்ட சோதனை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சோதனையின் போது, மக்களின் கையடக்கத் தொலைபேசித் திரையில் ஒரு செய்தி தோன்றும். அதிர்வு மற்றும் உரத்த எச்சரிக்கை ஒலியுடன் 10 வினாடிகள் அது ஒலிக்கும். கையடக்கத் தொலைபேசிகள் silentஇல் இருந்தாலும் அது ஒலிக்கும்.

இந்த திட்டம், அமெரிக்கா, கனடா, ஜப்பான் மற்றும் நெதர்லாந்தில் பயன்படுத்தப்படும் திட்டங்களின் மாதிரியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்