தாய்வானின் கிழக்குக் கடற்கரைப் பகுதியை 5.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம், இன்று (21) காலை ஏற்பட்டதாகத் தீவின் வானிலை ஆய்வு நிலையம் அறிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மக்கள்தொகை அதிகம் இல்லாத பகுதியிலேயே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மேலும், தாய்வான் தலைநகர் தைப்பேயிலுள்ள கட்டடங்கள் அதிர்ந்தன. எனினும், சேதம் எதுவும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.