ரசிய -உக்ரைன் போர் தொடர்ந்து நடைபெறும் நிலையில் சீனா-ரசிய உறவு மேம்பட்டு வருவதாக மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் இரு நாட்டு சந்திப்பு சந்தேகங்களை வலுவாக்கி உள்ளது.
ரசிய அதிபர் புடினும் சீன பாதுகாப்பு அமைச்சர் லீ ஷாங் பூங் மஸ்க்கோவில் சந்தித்து பேச்சுவார்த்தை ஒன்றை நடாத்தி வருகின்றனர்.
இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்புகள் பற்றிய முக்கியமாக பேசப்பட்டது.
இரு நாடுகளின் சந்திப்பில் ரசிய பாதுகாப்பு அமைச்சர் செர்கய் சோங்குவும் உடன் இருந்ததாக கூறுகின்றனர் . மேலும் சந்திப்பின் முடிவில் ஊடகங்களுடன் பேசிய லீ ஷாங் பூங் இரு இடதுசாரி கொள்கையுடைய நாடுகளுக்கும் வலுவான நட்பு இருப்பதாக தெரிவித்தார். இதை போன்ற சந்திப்பு கடந்த மாதம் சீனா அதிபர் ஜி ஜிம்மிம்க்கும் மாஸ்க்கோவில் நடைப்பெற்றது.