கிரென்ஃபெல் டவர் தீ விபத்து ஏற்பட்டு ஆறு ஆண்டுகள் ஆன நிலையில், உயரமான கட்டிடங்களில் ஏற்படும் தீயை சமாளிக்க இலண்டனின் தீயணைப்பு வீரர்கள் முறையாக பயிற்சி பெறுகிறார்களா என்ற கவலை எழுந்துள்ளது.
தீயணைப்புப் படைகள் ஒன்றியத்தின் இலண்டன் பிராந்தியத் தலைவர் கரேத் பீட்டன், தலைநகரின் தீயணைப்புக் குழுக்கள் இன்னும் “உண்மையான” உயரமான கோபுரங்களில் பயிற்சி பெறவில்லை என்று எச்சரித்தார்.
இலண்டன் தீயணைப்புப் படையின் (LFB) துணை தலைவர்தனது ஊழியர்களுக்கு மிகவும் “யதார்த்தமான பயிற்சி சூழல்” தேவை என்று ஒப்புக்கொண்டார்.
மே 17 புதன்கிழமையன்று இலண்டன் சட்டசபையின் தீ, பின்னடைவு மற்றும் அவசர திட்டமிடல் குழுவின் கூட்டத்தில் இந்த பிரச்சினை விவாதிக்கப்பட்டது.
“LFB ஆளில்லாத சில உயரமான கட்டிடங்களைப் பயன்படுத்துகிறது, ஆனால் இலண்டனில், எங்களுக்கு உண்மையான தீ தொடர்பான உயர்மட்ட பயிற்சி இல்லை. கிரென்ஃபெல் சம்பவம் இடம்பெற்ற ஆறு ஆண்டுகளுக்குப் பிறகும் நாங்கள் அவ்வாறு செய்யவில்லை” என பீட்டன், சிட்டி ஹால் கூட்டத்தில் கூறினார்.