இத்தாலியில் 06 மாதங்களுக்கு பெய்ய வேண்டிய மழை கடந்த வாரத்தின் ஒன்றரை நாளில் பெய்தது. இதனால் நாட்டின் பல்வேறு இடங்களில் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.
உமிலியா ரோமான்யா (Emilia-Romagna) பகுதியில் வெள்ளத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர்.
ஜப்பானில் G7 மாநாட்டில் பங்கேற்றுத் திரும்பிய இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி (Giorgia Meloni) வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டுள்ளார். இதன்போது பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான உதவிகளை வழங்குவதாக அவர் உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குவது குறித்து, நாளை (23) அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.