June 4, 2023 9:56 pm

இங்கிலாந்தில் வேகமாக பரவும் புதிய இதய நோய்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
இங்கிலாந்தில் வேகமாக பரவும் புதிய இதய நோய்

இதயத்தில் ஏற்படும் ஒருவித வைரஸ் தொற்றால், ஒரு குழந்தை உயிரிழந்த நிலையில் மேலும் ஏழு சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள
சம்பவம் இங்கிலாந்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு வேல்ஸ் மற்றும் மேற்கு இங்கிலாந்தில் இப்பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதயத்தில் இருக்கும் வீக்கம், அலர்ஜியை ஏற்படுத்தும் ஒரு வகை நோய் பாதிப்பு கடந்த ஒரு வருடமாகவே பிறக்கும் குழந்தைகளுக்கு கண்டறியப்பட்டு வருகிறது.

இந்த நோய் பதினைந்து குழந்தைகளுக்கு கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவர்களின் 9 பேருக்கு எண்டோ வைரஸ் இருப்பது உறுதியானது.

இந்த வைரஸ் சுவாச நோய் மற்றும் கை மற்றும் கால்கள் தொடர்பான நோய்கள், மூளை காய்ச்சலை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்