June 2, 2023 12:19 pm

ஐரோப்பிய ஒன்றியத்தால் Metaவுக்கு 1.2 பில்லியன் யூரோ அபராதம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
ஐரோப்பிய ஒன்றியத்தால் Metaவுக்கு 1.2 பில்லியன் யூரோ அபராதம்

பேஸ்புக்கின் தாய் நிறுவனமான Meta நிர்வாகத்துக்கு 1.2 பில்லியன் யூரோ அபராதம் விதித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கான ஐரிஷ் டேட்டா புரடக்ஷன் கமிஷன் (டிபிசி) நடத்திய விசாரணையில், 2020ஆம் ஆண்டிலிருந்து ஐரோப்பிய ஒன்றிய பயனாளர்களின் தகவல்களை பேஸ்புக் நிறுவனம் அமெரிக்காவுக்கு வழங்கி வந்தமை தெரியவந்துள்ளது.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை மீறி, ஐரோப்பிய யூனியன் பயனாளர் தகவல்களை அமெரிக்காவுக்கு அனுப்பியதற்காக ஐரோப்பிய டேட்டா புரடெக்ஷன் போர்டு (இடிபிபி), Meta நிர்வாகத்துக்கு 1.2 பில்லியன் யூரோ அபராதம் விதித்துள்ளது.

இது குறித்து Meta நிறுவனம் கூறுகையில், “ஐரோப்பிய யூனியனின் இந்த நடவடிக்கை நியாயமற்றது. முற்றிலும் குறைபாடுடையது. பிற நிறுவனங்களுக்கு ஆபத்தான முன்னுதாரணத்தை இது ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் மெட்டா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது, ஏமாற்றமளிக்கிறது” என்று தெரிவித்துள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்