October 4, 2023 4:54 am

குழந்தைப் பிறப்பு விகிதத்தை உயர்த்த ஜப்பான் திட்டம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
குழந்தைப் பிறப்பு

குழந்தைப் பிறப்பு விகிதத்தை உயர்த்த 25 பில்லியன் டொலர் மதிப்புள்ள திட்டத்தை ஜப்பான் அறிவித்துள்ளது.

ஜப்பானியர்கள் பிள்ளை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், மூன்று ஆண்டுகளில் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.

பிள்ளை வளர்ப்பு, கல்வி, கர்ப்பகாலச் சேவைகள் முதலியவற்றுக்கு மேலதிக உதவிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள்தொகையைப் பெருக்குவதற்குத் தேவையான கொள்கை குறித்து ஜப்பானிய அரசாங்கம் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் என்றும் கூறப்படுகின்றது.

வேலை நேரம், தந்தையருக்கான விடுப்பு உள்ளிட்ட அம்சங்கள் ஆராயப்படும் என்று ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா கூறியுள்ளார்.

அத்துடன், இளம் ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், இளைஞர்கள் சீக்கிரமாகவே குடும்ப வாழ்க்கையைத் தொடங்க அது உதவும் என தெரிவிக்கப்படுகின்றது.

உலகில் முதியோர் அதிகமாக வாழும் நாடுகளின் வரிசையில் ஜப்பானுக்கு இரண்டாம் இடத்தில் உள்ளதுடன், முதலிடத்தில் மொனாக்கோ உள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்