இலண்டனில் நீடித்த வறண்ட வானிலை முடிவுக்கு வருவதால், இந்த வார இறுதியில் கடுமையான மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இலண்டனில் சனிக்கிழமையன்று “இடியுடன் கூடிய மழை” பெய்யக்கூடும். எனினும் வெப்பநிலை அதிகபட்சமாக 24Cஐ எட்டலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்த வருடத்தில் இதுவரை இல்லாத வெப்பநிலை இந்த வார இறுதிக்குள் எட்டப்படும் என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
இங்கிலாந்தின் சில பகுதிகளில் அதிகபட்சமாக 25C முதல் 28C வரை வெப்பநிலை காணப்படலாம் என்று கூறப்படுகின்றது.