இங்கிலாந்தில் பாதுகாப்பற்ற அல்லது பழைய பள்ளிக் கட்டிடங்களில் சுமார் 700,000 குழந்தைகள் கற்பிக்கப்படுகிறார்கள் என்று ஓர் அறிக்கை கூறுகிறது.
கல்வித் துறை (DfE) 2021 முதல் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஏற்படும் காயம் அல்லது இறப்பு அபாயத்தை மிகவும் முக்கியமானதாக மதிப்பிட்டுள்ளதாக தேசிய தணிக்கை அலுவலகம் (NAO) தெரிவிக்கிறது.
பல ஆண்டுகளாக நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் இந்த அபாயங்கள் கவனிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
பள்ளியில் பாதுகாப்பை விட எதுவும் முக்கியம் இல்லை என்று கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறினார். மேலும், பள்ளிகளை பாதுகாப்பாகவும் செயல்படவும் 2015 முதல் £15bnக்கும் அதிகமான தொகையை கல்வித் துறை ஒதுக்கியுள்ளது.
ஆனால், NAO, இங்கிலாந்தின் சுதந்திரமான பொதுச் செலவு கண்காணிப்பு அமைப்பு, பள்ளிக் கட்டிடங்களின் மோசமான நிலை மாணவர்களின் தேர்ச்சி மற்றும் ஆசிரியர் தக்கவைப்பை பாதிப்பதாக கூறுகிறது.
தமது பள்ளி கட்டிடங்கள் 1960களில் கட்டப்பட்டதால் பாதுகாப்பற்று இருப்பதாக ஆசிரியர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
“கடந்த சில தசாப்தங்களாக அரசாங்கத்திடமிருந்து மையப்படுத்தப்பட்ட நிதி பற்றாக்குறை உள்ளது. இதன்பொருள் உள்ளூர் அதிகார சபை பள்ளிகளை அவர்கள் விரும்பியிருந்தாலும் பராமரிக்க முடியவில்லை,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.