Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா ரஷ்ய வௌிவிவகார அமைச்சர் இந்தியாவிற்கு விஜயம்

ரஷ்ய வௌிவிவகார அமைச்சர் இந்தியாவிற்கு விஜயம்

1 minutes read

ரஷ்ய வௌிவிவகார அமைச்சர் சேர்ஜி லெவ்ரோவ் (Sergey Lavrov) இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அவர் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளதாக இந்திய வௌிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

கச்சாய் எண்ணெய், ரூபாய் – ரூபிள் கொடுக்கல் வாங்கல் மற்றும் ஆயுத உடன்படிக்கைகள் நிகழ்ச்சி நிரலில் உள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் ஆழ்ந்த அதிருப்தியடைந்துள்ளதாக அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் இந்தியாவை விமர்சித்துள்ளன.

அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளினால் ரஷ்யாவுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடைகளை குறைத்து மதிப்பிடும் ரஷ்யாவின் முன்மொழிவை இந்தியா கருத்தில் கொண்டுள்ளதாகவும் குற்றஞ்மத்தப்பட்டுள்ளது.

விளாடிமிர் புட்டினின் யுத்தத்திற்கு உதவி புரிவதை தவிர்த்து சரியான நிலைப்பாட்டை எடுப்பதற்கான சந்தர்ப்பம் இதுவெனவும் சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் இறைமையுடன் உக்ரைனிய மக்களுடன் நிற்பதற்கான காலம் இதுவெனவும் அமெரிக்க வர்த்தக அமைச்சர் கினா ரெய்மொன்டோ தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More