அமெரிக்காவிலும் கனடாவிலும் கடும் பனிப்புயல் வீசுகின்றது. இதனால் வட அமெரிக்காவில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது வீதிகளில் பயணம் செய்ய வேண்டாம் என அமெரிக்க பொதுமக்களுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
அத்துடன், சுமார் 2,000க்கும் அதிகமான விமான சேவைகள் தடைபட்டுள்ளன. அதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் நிர்க்கதியாகியுள்ளனர்.
கனடாவிலும் கடும் குளிருக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெயில் அதிகமாக உள்ள லாஸ் ஏஞ்சலிஸ் (Los Angeles) நகருக்கு அருகில் இருக்கும் பகுதிகளுக்குக்கூடக் கடும் பனிப்பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மினசோட்டாவின் (Minnesota) சில பகுதிகளில் 2 சுற்று பனிப்பொழிவுகள் ஏற்படுமென அமெரிக்க வானிலை அதிகாரிகள் கணித்துள்ளனர்.
மேலும், வட கிழக்கிலிருந்து வீசும் பலத்த காற்று இந்நிலைமையை இன்னும் மோசமாக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
படம்: AFP