சீன எல்லையில் எந்த தாக்குதலுக்கும் தயார் | இந்தியா

இந்திய – சீன எல்லையில் தொடரும் ஊடுருவலை எதிர்கொள்ள நீண்ட கால அடிப்படையில் எத்தகைய தாக்குதலையும் முறியடிக்க இந்தியா தயாரகவுள்ளதாக இராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

இந்தியா-சீனா எல்லையில் நிலவி வரும் பதற்றம் குறித்து கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தெரிவித்துள்ள அவர்  ‘இராணுவ ரீதியில் 5 முறையும் தூதரக ரீதியில் 3 முறையும் பேச்சு நடைபெற்ற நிலையிலும் இருநாடுகள் இடையிலான உரசல் நீடித்து வரும் நிலையில் முப்படைகளின் தயார் நிலை குறித்து பொது கணக்கு குழுவிடம் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்