ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

கினிகத்தேனை – பொல்பிட்டிய பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பொல்பிட்டிய சமலன நீர்மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகாமையிலிருந்து குறித்த சடலம் நேற்று காலை மீட்கப்பட்டுள்ளது.

எனினும் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தெரியவருகிறது.சடலத்திற்கு அருகில் தலைக்கவசம் ஒன்று கிடப்பதாகவும், எனினும் மோட்டார்சைக்கிள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில் குறித்த நபர் கொலை செய்யப்பட்டனரா அல்லது வேறு ஏதும் காரணங்களால் இறந்துள்ளாரா என்பது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஆசிரியர்