யாழ் மத்திய நிலையத்தில் கலவரம் வெடிப்பு | சசிகலா சித்தார்த்தன் ஆதவாளர்கள் மீது அதிரடிப்படை தாக்குதல் 

சற்று முன்னர் யாழ் மத்திய நிலையத்தில்  அதிரடிப்படை  தாக்குதலை நடத்தியுள்ளது. கடந்த சில மணிநேரங்களாக யாழ் மத்திய நிலையத்தில் கூட்டமைப்பின் விருப்பு வாக்குகள் மீள மீள எண்ணப்பட்டு வருகின்றது. சுமந்திரனின் தோல்வியை கூட்டமைப்பு  ஏற்றுக்கொள்ளமுடியாத நிலையில் ஜனநாயகத்துக்கு எதிரான முறையில் வெற்றியை கூட்டமைப்பு பெற்றுக்கொள்ள முனைகின்றது. 


சசிகலாவின் வெற்றியை முறையற்ற வகையில் சுமந்திரனின் வெற்றியாக மாற்ற முயற்சி செய்த வேளையில் அவரது ஆதரவாளர்களின் எதிர்பைத்தொடர்ந்து சித்தார்தனின் வாக்குகள் மாற்ற முயற்சி செய்யப்பட்டது. அதுவும் முறியடிக்கப்பட்ட நிலையில் மீண்டும் சசிகலாவின் முடிவுகள் மாற்றி அமைக்கப்பட இருந்த நிலையில் ஆதரவாளர்களின் போராட்டம் வெடித்துள்ளது. 


தற்போது  யாழ் மத்திய நிலையத்தை  அதிரடிப்படையினர் பொறுப்பெடுத்துள்ளனர். நள்ளிரவு தாண்டி பெருமளவு பொதுமக்கள் திரண்டுள்ளார்கள். 


யாழ் மத்திய நிலையத்திலிருந்து வணக்கம் இலண்டன் செய்தியாளர் | மேலதிக செய்திகள் விரைவில்   

ஆசிரியர்