திருகோணமலை – சேருநுவர பகுதியில் புத்தர் சிலைகள் அடித்துடைப்பு

திருகோணமலை – சேருநுவர பகுதியில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மதுபோதையிலிருந்த மூவரே சிலை உடைப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கைது செய்யப்பட்டுள்ள மூவரும் மதுபோதையில் சேருநுவர சந்திக்கு அருகில் உள்ள புத்தர் சிலைகளை உடைத்து சேதமாக்கியுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை, சேருநுவர, தெஹிவத்த, வேவெல கெதர, அம்பாலே, மெத நுவர பகுதிகளை சேர்ந்த 45 வயதுடைய வீரக்கோன் முதியன்சலாகே ரஞ்சித் அபேரத்ன, 30 வயதுடைய தனிபல முதியன்சலாகே அரேஸ் ஜெயசிங்க மற்றும் 26 வயதுடைய சமீர சம்பத் பண்டார சகல சூரிய எனத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்களை இன்று மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சேருநுவர பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

புத்தர் சிலை உடைப்பு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆசிரியர்