தபால் மருந்தால் ஏற்பட்ட அவலநிலை

மீரிகமவில் 16 வயதுடைய சிறுவனின் திடீர் பார்வை இழப்பு குறித்து விசாணை மேற்கொள்ள மீரிகம ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் அடங்கிய சிறப்புக் குழுவொன்று அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 04 அன்று மீரிகாமா வைத்தியசாலையிலிருந்து தபால் மூலம் அனுப்பப்பட்ட மருந்துகளை உட்கொண்ட பின்னர் இந்த சிறுவன் பார்வை இழந்துவிட்டதாக கூறப்படுகிறது.

கால்-கை வலிப்பு சிகிச்சைக்காக சிறுவன் ஏப்ரல் 03 ஆம் திகதி மீரிகமா ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளான்.

அதனைத் தொடர்ந்து கோவிட் -19 தொற்றுநோயின் விளைவாக விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக மீரிகம வைத்தியசாலை வட்டாரத்தினர், தனது பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை சிறுவனுக்கு தபால் மூலம் அனுப்பியுள்ளது.

இந்த மருந்துகளை உட்கொண்ட 14 நாட்களுக்கு பின்னர் சிறுவன் பார்வையை இழந்து விட்டதாக அவனது பெற்றோர் கூறியுள்ளனர்.

இந் நிலையிலேயே தற்போது இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள மீரிகம வைத்தியசாலையின் வைத்தயர்கள் அடங்கிய சிறப்புக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மீரிகம, கலேலியவில் பாதிக்கப்பட்ட சிறுவனின் வீட்டுக்கு சென்றிருந்த மருந்தாக்கல், விநியோக மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன்ன, இது தொடர்பில் விசாரணைகள் தொடங்கப்படும் என்று உறுதியளித்தார்.

அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுவனின் கண்பார்வை மீண்டும் கொண்டுவர அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஆசிரியர்