இராணுவ வாகனம் மோதி பெண்ணொருவர் படுகாயம்

கிளிநொச்சி மத்திய கல்லுாரிக்கு முன்பாக இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனமதிக்கப்பட்டுள்ளார்.

டிப்போ சந்தியில் இருந்து மத்திய கல்லூரி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சயிக்கிள் மீது பின்னால் அதே திசையில் வந்த இராணுவ வாகனம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பாடசாலையில் கல்வி கற்று வரும் தனது பிள்ளைகளை ஏற்றி வரச் சென்ற சமயமே இந்த விபத்து இடம் பெற்றுள்ளது இதன் போது விக்கினேஸ்வரன் தசாயினி (வயது-35) செல்வா வீதி ஆனந்த புரத்தைச் சேர்ந்த பெண்ணே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.

விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மற்றும் இரானுவ பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

ஆசிரியர்