ரணிலும் மைத்திரியும் தப்பிக்க முடியாது | ராஜித

நாட்டில் நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் பொறுப்பிலிருந்து மைத்திரியும் ரணிலும் ஒருபோதும் தப்பிக்க முடியாதென முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில்  ராஜித சேனாரத்ன, நேற்று (வெள்ளிக்கிழமை)  மீண்டும் சாட்சியமொன்றை வழங்குவதற்காக முன்னிலையாகி இருந்தார்.

நேற்றுக்காலை 9.30 மணியளவில் முன்னிலையாகிய ராஜித சேனாரத்ன, பிற்பகல் 1மணியளவில் ஆணைக்குழுவிலிருந்து அவர் வெளியேறினார்.

அதனைத் தொடர்ந்து ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே ராஜித சேனாரத்ன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்தத் தாக்குதல்கள் தொடர்பாக முன் அறிவிப்புகள் கிடைத்திருப்பதை என்னால் உறுதிசெய்ய முடியும்.

அதேபோன்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இந்தப் பொறுப்பிலிருந்து  ஒருபோதும் விலக முடியாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர்