பழைய மாணவர் நிதியத்துக்கு இரண்டரை மில்லியன்கள்

கிளிநொச்சி வட்டக்கச்சி மத்திய கல்லூரி பழைய மாணவர்கள் சங்க பிரித்தானியக் கிளையினால் முன்னெடுக்கப்படும் பழைய மாணவர் நிதியத்துக்கு இன்றைய தினம் இலண்டனில் நடைபெற்ற பழையமாணவர் ஒன்றுகூடலில் சுமார் இரண்டரை மில்லியன்கள் ரூபா நிதி சேகரிக்கப்படுள்ளது.

வட்டக்கச்சி மத்திய கல்லூரி பழைய மாணவர்கள் பிரித்தானியக்கிளையினால் முன்னெடுக்கப்படும் பழைய மாணவர் நிதியமானது பத்து மில்லியன்கள் ரூபாக்களை பழையமானவர்களிடமும் நலன்விரும்பிகளிடமும் சேகரித்து அப்பணத்தினை நிலையான வைப்பின்மூலம் கிடைக்கும் வருமானத்தினை பாடசாலையின் கற்றல் மற்றும் கற்பித்தல் முறைமைகளுக்கு பயன்படுத்தும் நோக்குடன் முன்னெடுக்கப்படுவதாக சங்கத்தின் தலைவர் யுவன் தெரிவித்தார்.

இன்றைய ஒன்றுகூடல் நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் ஆசிரியரும் பழைய மாணவியுமான திருமதி கோசலாதேவி நவரட்னராஜா கலந்துகொண்டதுடன் அவருக்கான மதிப்பளிப்பு நிகழ்வும் நடைபெற்றது. ஏராளமான பழைய மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்புச் செய்தனர்.

ஆசிரியர்