கிளிநொச்சியில் இருந்து பிரித்தானியா நோக்கிய சாதனைப்பயணம்

பிரித்தானியா பர்மிங்ஹாமில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் 2022 போட்டிகளில் குத்துச்சண்டை போட்டிக்கு கிளிநொச்சியில் இருந்து முதன்முதலாக வீரர் ஒருவர் தெரிவாகியுள்ளார்.


கிளிநொச்சி தருமபுரம், நாதன் குடியிருப்பைச் சேர்ந்த விட்டாலிஸ் நிக்லஸ் என்னும் வீரரே இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இவர் தேசியப் போட்டிகளில் வட மாகாணத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி பல பதக்கங்களை வடமாகாணத்திற்காக பெற்றுத்தந்தவர். இவரது திறமைகாரணமாக இலங்கை தேசிய குத்துச்சண்டை அணிக்குள் உள்வாங்கப்பட்டு பல தகுதிகாண் போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டி இந்த கொமன்வெல்த் போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.


இப்போட்டிகள் எதிர்வரும் யூலை மாதம் 28ம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் 08ம் திகதிவரை பிரித்தானிய புகழ்பெற்ற நகரான பர்மிங்ஹாமில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப்பெறும் வீரர்கள் ஒலிம்பிக் தகுதிகாண் போட்டிகளில் பங்குபெறும் வாய்ப்புக்கள் உள்ளது. கிளிநொச்சி வீரர் இப்போட்டிகளில் வெற்றியீடடுவதற்காக வணக்கம் இலண்டன் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றது. 

ஆசிரியர்