ஜேர்மன், பிரிட்டனுக்கு பின்னர் ரஷ்யா மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை

மேற்கத்திய நிதியுதவியிலிருந்து ரஷ்யாவை திறம்பட துண்டிக்கும் பொருளாதாரத் தடைகளை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் செவ்வாயன்று அறிவித்தார்.

உக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் நடவடிக்கைகள் குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பைடன்,

நாங்கள் (அமெரிக்கா) 2 ரஷ்ய நிதி நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கிறோம். ரஷ்யா இனி மேற்கத்திய நாடுகளில் இருந்து பணம் திரட்டவோ அல்லது மேற்கத்திய சந்தைகளில் வர்த்தகம் செய்யவோ முடியாது என்றார்.

ஜேர்மனியும் பிரிட்டனும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை முன்னெடுத்ததைத் தொடர்ந்து அமெரிக்காவின் தடைகள் குறித்த அறிவிப்பு வந்துள்ளது.

ஜேர்மன் ரஷ்யாவுக்கான 2 இயற்கை எரிவாயு குழாய்க்கான சான்றிதழ் செயல்முறையை இடைநிறுத்தியது. இது ரஷ்ய எரிவாயுவை ஜேர்மனி வழியாக ஐரோப்பாவுடன் நேரடியாக இணைக்கிறது.

அதேநேரம் ஐந்து ரஷ்ய வங்கிகள் மற்றும் மூன்று தொழிலதிபர்களுக்கு எதிராக இங்கிலாந்து கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது.

இது தவிர ஐரோப்பிய ஒன்றியம் பல ரஷ்ய அதிகாரிகள் மற்றும் ரஷ்ய ஆயுதப் படைகளுக்கு நிதியளிக்கும் வங்கிகள் மீதும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி திங்களன்று கிழக்கு உக்ரேனின் இரண்டு பிரிவினைவாத பகுதிகளான டொனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் ஆகியவற்றின் சுதந்திரத்தை அங்கீகரித்தார்.

ரஷ்யா ஆதரவு பெற்ற உக்ரேனின் பிரிவினைவாதத் தலைவர்களுடன் புடின் நட்பு மற்றும் உதவி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதுடன், குறித்த பகுதிகளுக்கு படைகளை அனுப்ப ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார்.

ஆசிரியர்