எம்மைப் பற்றி

எம்மைப் பற்றி

வணக்கம் LONDON இணையம் உங்களை அன்புடன் அரவணைக்கின்றது. உலகமெல்லாம் பரந்து வாழும் இனங்களில் தமிழினமும் ஓன்று . உலகின் வட துருவத்துக்கும் தென் துருவத்துக்கும் இடையே தமிழன் கால் பதிக்காத இடமும் இல்லை அவன் வாழ்வை அமைக்காத நாடும் இல்லை என்று சொல்லுமளவுக்கு தமிழர் வாழ்வு பரந்து விரிந்து கால ஓட்டத்துடன் முன் நோக்கிச்செல்கின்றது. இவ் வாழ்வு மேலும் செழுமை அடையவேண்டும், எழுச்சி அடையவேண்டும்.

தமிழ்மொழியின் வளர்ச்சிதான் தமிழ் இனத்தின் இருப்பை நிலைநிறுத்தும். தமிழ்மொழியின் வளர்ச்சி என்பது தமிழ் இனத்தின் கலாச்சாரப் பண்பாட்டு பரம்பல் ஊடாகவே ஏற்படும். வேற்றுமொழி ஆதிக்கமும் மேலைத்தேய நாகரிகமும் தாயகத்திலும் சரி புலத்திலும் சரி தமிழ் மொழிக்கும் அதன் வளர்ச்சிக்கும் மிகவும் சவாலாகவே உள்ளது.


அடக்குமுறைக்கு உட்பட்ட ஒரு பிரதேசத்தில் சுதந்திரமான மொழி வளர்ச்சி என்பதற்கு இடம் இல்லாமலோ அல்லது மேலைத்தேய மோகத்தில் மொழி வீழ்ச்சி அடைவதற்கோ இடம் கொடுத்தால், அவ் மொழி சார்ந்த இனமும் ஒரு நாள் இல்லாதே போகும். இன் நிலைமை தமிழ் மொழிக்கோ அல்லது தமிழ் இனத்துக்கோ ஏற்பட்டால், நாளை எமது பிள்ளைகள், பிள்ளைகளின் குழந்தைகள், அவர்களின் குழந்தைகள் எவ்வாறு இருப்பார்கள்

தமிழர் வாழும் தேசமெங்கும் எம்மொழி எழுச்சி அடையவேண்டும், எங்கள் குழந்தைகள் தமிழ் கற்க வேண்டும் எங்கள் குழந்தைகள் கலைகள் கற்க வேண்டும். செம்மொழியான தமிழ்மொழி செழுமை அடையவேண்டும். பிறக்கும் குழந்தைகளெல்லாம் அம்மா என்றே அழைக்க வேண்டும். எமது கலை பண்பாட்டு செயல்ப்பாடுகள் அதிகரிக்க வேண்டும். அவை எமது வாழ்வியலுடன் கலந்து பயணிக்க வேண்டும். குறிப்பாக புலம் பெயர் நாடுகளில் மிகவும் எழுச்சியுடன் மேற்கொள்ளவேண்டும்.

London தமிழர் நிகழ்வுகளை தருவதுதான் எமது பிரதான நோக்கமாக இருந்தாலும் எமது பார்வையாளர்களுக்காக மேலும் சில சுவையான, பயனுள்ள விடயங்களையும் சற்று மாறுதலாக இணைக்க உள்ளோம். இச் சிறு முயற்சி மூலம் எமது தமிழ் மொழிக்கும், எமது இனத்துக்கும், எமது கலாச்சாரத்துக்கும் மற்றும் தமிழர் பண்பாட்டுக்கும் எமது பங்களிப்பை செய்வதை இட்டு மன நிறைவு கொள்கின்றோம்.

தமிழன்,
தமிழனாய் இருந்தாலே
மனிதனாய் வாழலாம் – நாம்
தமிழைக் கற்றாலே
தனித்துவமாய் இருக்கலாம்……

 

தமிழர் நிகழ்வுகள் அனைத்துத் துறைகளிலும் நடைபெறவேண்டும், நாம் அனைவரும் அவற்றைப் பார்த்து மகிழவேண்டும்.

 

நன்றி

வணக்கம் LONDON இணையம்