Monday, April 15, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை இந்தியவரலாற்றில் சோழர்காலம் பொற்காலம் | பெருமாள் பிரமேதா

இந்தியவரலாற்றில் சோழர்காலம் பொற்காலம் | பெருமாள் பிரமேதா

14 minutes read

பழந்தமிழ்நாட்டையாண்ட மூவேந்தர்களுள் சோழர்கள் முக்கியமானவர்களும் முதன்மையானவர்களும் ஆவர். இவர்களது ஆட்சிக் காலமானது கிறிஸ்துவுக்குப் பின் ஒன்பதாம் நூற்றாண்டு தொடக்கம் பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை அமைகின்றது. சிற்றரசர்களாக இருந்த சோழர்கள் கிறிஸ்துவுக்குப் பின் ஒன்பதாம் நூற்றாண்டில் தஞ்சையில் கிளர்ந்தெழுந்தனர். இவ் முயற்சியால் முதலில் பல்லவர்களும் பின் பாண்டியர்களும் அழிந்து நாளடைவில் தென்னகம் முழுவதும் அவர்களின் ஆட்சி நிகழவே சோழப் பேரரசுஉருவாகி தமிழ் வரலாற்றின் உச்சநிலையை அடைந்தது. ஆதிகாலத்திலிருந்தே தமிழர் ஆட்சி முறையின் முக்கியமான அம்சம் முடியாட்சி ஆகும்.இவ் மிகுந்த அதிகாரம் படைத்த முடியாட்சி முறையான சோழப்பேரரசு காலத்தில் பெருமையும் வருவாயும் வெற்றிகள் குவித்தன. சோழர் தலைநகரமானது முதலாம் ராஜராஜர் காலம் வரையில் தஞ்சையிலும் பிறகு கங்கைகொண்ட சோழபுரத்தில் மாற்றியமைக்கப்பட்டது.

 சோழர்களின் காலம் தமிழகத்தை பொறுத்தவரையில் ஒரு பொற்காலம் என்பதில் ஐயமில்லை. செப்பேடுகள் கல்வெட்டுகள் மற்றும் சோழர் காலத்தில் வெளியிடப்பட்ட காசுகள் கட்டப்பட்ட கோயில்கள் பாடப்பட்ட பாடல்கள் மெய்க்கீர்த்திகள் இவற்றின் துணைகொண்டு தொல்பொருள் ஆய்வுத்துறை வல்லுநர்களும் கற்றுணர்ந்த பெரியோர்களும் வெளிக்கொணர்ந்து உள்ளன. அவற்றின் துணை கொண்டு பார்க்கும்போது சோழர்களின் ஆட்சி அமைப்புமுறை கலைத்திறன் மற்றும் கட்டிட அமைப்பு திறன் கொண்டு அறியலாம்.

; காலங்கள் சென்றாலும் எக்காலத்திலும் நிலைபெற்று போற்றிப் பாதுகாக்கும் தன்மையில் இத்தகைய அம்சங்களை நோக்கும்போது சோழர்காலம் பொற்காலம் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. சோழர்காலம் பொற்காலம் என்பதை நிரூபிக்கும் வகையில் பின்வரும் அம்சங்களை உதாரணம் கொண்டு நோக்கலாம் அதில் முக்கியமானது சமுதாய நிலையாகும.; சமுதாய நிலைபற்றி நோக்குகையில் கோயிற்கட்டடக்கலை,போர்ப்படை,கப்பல்கட்டுதல் முதலிய கைத்தொழில்களை மக்கள் மேற்கொண்டனர். காஞ்சிபுரம் இன்றுபோல் அன்றும் நெசவுத்தொழில் மிகுதியாக போற்றினர். மாடை அல்லது பொன் என்பதொரு நாணயம் பயன்படுத்தினர். வெளிநாட்டு கடல் கடந்த வாணிபம் சுறுசுறுப்பாக நடைபெற்றது. ஒவ்வொரு ஊரிலும் கோயில்கள் காணப்பட்டது. “கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பது அக்காலத்தில் பழமொழி போலும் கோயில்கள் சமுதாயத்தில் கலாசார செயல்பாடுகளாக விளங்கின.

சோழர் காலத்தின் சமுதாய மக்களிடையே கல்வி நிலையும் வளர்ச்சி அடைந்து காணப்பட்டது. எடுத்துக்காட்டாக தென் ஆர்க்காடு மாவட்டத்தில் எண்ணாயிரம் எனும் கிராமத்தில் வேத வேதாந்த  கற்க ஒரு கல்லூரி இருந்தது. அதில் 14 ஆசிரியர்களும் 340 மாணவர்களும் இருந்தன.திருமுக்கூடல்,திருவொற்றியூர் ஆகிய இரண்டு இடங்களிலும் இத்தகைய கல்வி நிலையங்கள் இருந்தன. இக்கழகங்களுக்கு சோழ மன்னர்கள் பெரும் ஆதரவு வழங்கினர். திருமுக்கூடலில் மாணவர்கள் வசதிக்காக தங்குமிடமும் மருத்துவச்சாலைகள் அமைக்கப்பட்டன.இதன் காரணமாக கற்ற சமுதாயம் தோன்றி தமிழ் இலக்கியம் மிகப் பெரிய நிலையை எய்தியது.

இவர்களின் ஆட்சிக்கு முன் பல இலக்கியங்கள் படைக்கப்பட்ட போதிலும் சோழர் காலத்திலே இலக்கியம் பல வடிவங்களில் உருப்பெற்றது. தென்னிந்தியாவில் முதல் தடவையாக ஒரு பேரரசு ஏற்பட்டது என்பதையொட்டி உணர்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்து அதன் எதிரொலியாக இலக்கியங்களின் பிரதிபலிப்பாயிற்று. அந்தவகையில் சோழர் வலிமையாக ஆட்சிபுரிந்த காலப்பகுதியிலே அந்நிய படையெடுப்பு,கலகம்,குழப்பம் எதுவுமில்லாத நிலையில் சைவ வைணவ பக்தி இயக்கங்களின் எழுச்சியும் சோழ மன்னர்களின் கலை இலக்கியங்கள் மீதான விருப்பமும் புலவர்கள் மீது காட்டிய பரிவும் மிகச் சிறந்த இலக்கியங்கள் தமிழில் தோன்ற காரணமாயிற்று. சாளுக்கிய சோழர்களுடைய ஆட்சிக்காலம் தென்னிந்திய கலை இலக்கியங்களின் பொற்காலம் என சரித்திர ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஏனெனில் இதிகாசம்,கோவை,அகராதி,சைவபக்திஇலக்கியம்,வைணவபக்திஇலக்கியம,;தூது,நாடகம்,புராணங்கள்,பிள்ளைத்தமிழ்,அந்தாதி இலக்கணம் உரைநடை இலக்கியம் போன்றவற்றின் தோற்றமும் விருத்தியும் ஆகும்.

 பல்லவர்களும் பாண்டியர்களும் போற்றி வளர்த்த கட்டடக்கலை மரபை அவர்களுக்குப் பின் வந்த தொடர்ந்து ஆதரித்து மென்மேலும் அதை வளர்ச்சியடையச்செய்தனர். பல்லவ,பாண்டிய வம்சங்களின் கீழ் கட்டடக்கலையும,;வண்ண ஓவியக்கலையும்,சிற்பக்கலையும் பெரும்பாலும் பொதுக்கட்டடங்களிலும் குறிப்பாக கோயில்களிலும் வார்க்கப்பட்டது. ஆனால் சோழர் ஆட்சியில் செல்வமும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் பெருகவுமாயின. இதற்குத்தக்க வகையில் அவர்கள் கட்டிய கோயில்கள் நிலப்பரப்பிலும் உயரத்திலும் கலைத்துறையிலும் தனிச்சிறப்புடன் அமைந்தன. தஞ்சாவூரிலும் கங்கைகொண்ட சோழபுரத்திலும் சோழர்கள் கட்டிய கோயில்கள் மிகப் பிரமாண்டமானவை,தலைச்சிறந்தவை வெளிநாட்டவர்கள் கூட வியப்படையும் வண்ணம் தமிழ்நாட்டின் கலைத்திறமையை நிலைநாட்டி அவற்றின் மூலம் தமிழர் கண்ட ஒரு பேரரசின் ஆற்றலையும் பெருமிதத் தோற்றத்தையும் அவர்கள் உலகத்திற்கு எடுத்தியம்பியுள்ளனர். சோழர்களுடைய கட்டடக்கலை ஆர்வத்திற்கு முடிசூட்டியது போல கும்பகோணத்திற்கு அருகே உள்ள திருபுவனத்திலும்,தாராசுரத்திலும் இருபெரும் கோயில்கள் உள்ளன. இதோடு இணைத்து சிற்பக்கலை,ஓவியம்க்கலை ஆகிய துறைகளும் போட்டி போட்டு முன்னேறியது.

தென்னிந்திய கட்டடக் கலை அறிவியல் முறையில் ஆராய்ச்சிக்கு வித்திட்ட “மூவே தூப்ராய்’ என்ற பிரேஞ்சு நாட்டு அறிஞரின் கருத்தானது “சிற்பக்கலையில் பல்லவர்கள் மேம்பட்ட நிலையையடைந்தனர.; ஏனைய துறைகளை விட கட்டடக்கலையிலேயே சோழர்கள் வல்லவர்களாக திகழ்ந்தனர். எளிமையும் பெருமையும் கலந்த ஒரு அமைப்பு முறையை அவர்கள் தங்களுக்கென்று வகுத்துக் கொண்டார்கள்”; என்றார்.

எத்தனை காலங்களும் யுகங்களும் சென்றாலும் சோழரின் கட்டடக்கலை முதன்மையானதாகவும் அழியாத உறுதித்தன்மை கொண்டதாகவும் இந்துக்களின் பிரதிபலிப்பாகவும் தமிழர் ஆட்சிக்கு இன்றியமையாத பெருமையாகவும் காணப்படுகின்றன. சோழர்காலத்தில் இத்தன்மையை நோக்கும்போது சோழர்காலம் பொற்காலம் என்று கூறுவதில் ஐயமில்லை.

 மேற்குறிப்பிட்ட அனைத்து அம்சங்களையும் தொகுத்து நோக்குகையில் சோழர்காலம் பொற்காலம் என கூறினாலும் அதனை பொற்காலம் என ஏற்றுக் கொள்வது தொடர்பாக அறிஞர்களே முரண்பட்ட கருத்துக்கள் காணப்படுகின்றுது.ராஜராஜனுக்கு முன்னர் நடுகல் வழிபாட்டு முறைமையே தமிழ்நாட்டில் பரவிக்காணப்பட்டது. பின்னர் அடிமையின் உழைப்பிலும் போர்க்கொள்ளையிலும் உருவாகியதே மாபெரும் கோவில்கள.; குறிஞ்சி,முல்லை பகுதியில் இருந்த வேளீர் எனும் இனக்குடிகளின் அரசுகளை இல்லாதொழித்து மருதநிலப் பரப்பில் பேரரசுகள் உருவாக்கம் பெற்றவரலாற்று காலமே இராஜராஜனின் காலம் ஆகும.; மேலும் போர்கள் மூலம் சிற்றரசர்களை நிர்மூலமாக்கி அவ்வரசுகளின் செல்வங்களையெல்லாம் கவர்ந்து தன் பேரரசைக் கண்டாலே அனைவரும் அச்சத்தால் உறைந்திட செய்யும் மாபெரும் சின்னமொன்றை உருவாக்கி அச்சின்னத்தின் மூலம் அதிகார மையமாகமாற்றிய தன்மையே இராஜராஜனின் காலத்திலிருந்தது. கழுவேற்றிக் கருவறுத்த சைவத்தின் வெற்றி ராஜராஜ பேரரசு உருவாக்கியதோடு ஒருங்கிணைந்த சைவர்களான வேளாளர்களும்,பிராமணர்களும் கூட்டணி அமைத்துக் அதிகாரமயமானார்கள.; இதன் காரணமாகவே மாபெரும் கோவில்கள் தோற்றம் பெற்றன.

கருங்கற்பாறைகளே இல்லாததும் காவிரியாறு கொண்டு வந்து சேர்த்த வண்டலால் நிரம்பியதுமான தஞ்சைப் பகுதியில் ஓருலட்சத்து முப்பதாயிரம் கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட கட்டடம்தான் பெரியக்கோவில் கட்டடக்கலை சார்ந்த நவீன தொழில்நுட்பங்களோ,சாலைகளோ,போக்குவரத்து வசதிகளோ இல்லாத அக்காலத்தில் இத்தகைய பெரிய கட்டடத்தைக் கட்டிமுடிப்பதற்கு எவ்வளவு மனித உழைப்பு தேவைப்பட்டிருக்கும்?; கட்டுமான பணியில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பதை ஆராயும்போது ஆயிரம் ஆண்டுகளாக நிலைத்திருக்கும் கோயிலை அடிமைகளின் இலவச உழைப்பில்தான் உருவாக்கியது. தனது ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து போர்கள் நடத்திய ராஜராஜசோழன் போரில் தோற்ற நாட்டு வீரர்களை கைதியாக்கி அவர்களின் உழைப்பின் மூலம் கோயிலைக் கட்டிமுடித்தான். போர்க்களங்களிலிருந்து கைதிகளை மாத்திரமல்லாது கோயிலுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் கொள்ளையடித்து கொண்டான்.

மேலைச்சாளுக்கிய மன்னன் சத்தியாசிரயனை வென்றபோது கைப்பற்றப்பட்ட செல்வங்களும்,ஈழம், கேரளத்தின்தென்பகுதி,ஆந்திரத்தின்தென்பகுதி ஆகியவற்றை வென்று அந்நாடுகளின் கருவூலங்களில் கொள்ளையடித்த செல்வங்களில்தான் 216 அடி கற்கோபுரம் அமைத்தான். மலைநாடு எனப்படும் சேரநாட்டை வென்றபோது எடுத்து வந்த பொன் நகைகளும், பாண்டியநாட்டை வென்றபோது கொள்ளையடித்து வந்த முத்து,பவளம்தான் பெருவுடையாருக்குரிய நகையாகும்.

அத்தோடு சாளுக்கிய நாட்டிலிருந்து கொள்ளையிட்டு பெருவுடையாருக்கு சொந்தமாகப்பட்ட 87593 கிலோ தங்கநகைகளும், சேரபாண்டிய நாட்டுல் கொள்ளையடித்து கிடைத்த 95.277 கிலோ வெள்ளியும் இதில் உள்ளடங்கும்.ஈழப்போரின் போது கைப்பற்றப்பட்ட கிராமங்கள் பெரிய கோவிலுக்காக வருவாய் கிராமங்களாக விடப்பட்டது. இவ்வாறு அயல் நாடெங்கும் போர்தொடுத்து கொள்ளையடித்த பொருட்களால் உருவானதுதான் தஞ்சைப் பெரியக்கோயில்.இக்கோவில் உருவாகுவதற்காக தென்னகத்தில் தொடர்ந்து குருதியாறு ஓடிக்கொண்டே இருந்தது.  காந்த@ர் முதல் ஈழம் வரை இதற்காக ராஜராஜன் படையெடுத்து பேரழிவை நடத்தினான்.காந்தரூரில் சேரனை தோற்கடித்து உதகைநகர் கோட்டை தகர்க்கப்பட்டு எஞ்சிய நகரமெங்கும் தீவைக்கப்பட்டது. இது அவனுடைய மெய்க்கீர்த்தியில்“காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி”என்று சொல்லப்பட்டது.

அண்மையில் கண்டறியப்பட்ட கல்வெட்டில் “மலையாளிகள் தலையறுத்து” என்றுள்ளதாக முனைவர் தொ.பரமசிவம் குறிப்பிடுகின்றார.; அடுத்துடன் மேலைச்சாளுக்கிய மன்னன் சத்தியாசிரனைத் தோற்கடித்து போரில் நகரங்களையும் கொளுத்தியும், குழந்தைகள் என்று கூடபாராமல் அனைவரையும் கொன்று வெறியாட்டம் போட்டான். சோழர்படை கன்னிப்பெண்களை கைப்பற்றி மனைவியாக்கிக் கொண்டும் மற்றப்பொருட்களைக் கவர்ந்துக்கொண்டும் தன் நாட்டிற்கு திரும்பினார்கள். மேலும் ஈழத்தின் மீது படையெடுத்து அந்நாட்டு அரசியையும் அவளுடைய மகளையும் கைப்பற்றி வந்தனர.; புத்தசமய நினைவுச்சின்னங்களிலிருந்து பொன்னாலான உருவங்களைக் கொள்ளையடித்தனர். இந்தப் படையெடுப்பின்போது அநுராதபுர நகரை தீவைத்து அழித்தனர். இதனை நோக்கும்போது சோழர்காலம் பொற்காலம் எனக் கூறமுடியாது.

மேலும் ஆகமநெறிப்படி பிரம்மாண்டமாகக் கட்டப்பட்ட கோவில்கள் தஞ்சை பெரியக்கோயில்களில் சைவப்பரப்பும் வேலையை மாத்திரம் செய்யவில்லை. சோழர்காலத்தின் வட்டிக்கடையாகவும், நிலவுடைமையாளராகவும்,பொற்களஞ்சியமாகவும் அரசின் அதிகாரபீடமாகவும் விளங்கியது.சோழ நாட்டின் விளைநிலங்களில் பெரும்பகுதி பெருவுடையார் கோவிலுடன் இணைக்கப்பட்டிருந்து.குடிகளிடமிருந்து விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு கோவிலுக்கு வசூலிக்கப்பட்டது.கோவில் நிதி குவியலிலிருந்து விவசாயிகளின் தொழில் தேவைக்கும்,பெண்களின் சீதனத்திற்கும் கடன் கொடுத்தனர.; பெருவுடையார் கோவில் கணக்கிலிருந்து பல்லாயிரக் கணக்கான பொன்னும், காசுளும்,களஞ்சும் பெரும்பாலும் பல உள்ளூராட்சி மன்றங்களுக்கும் சபைகளுக்கும் கடனாக கொடுக்கப்பட்டு 12 சதவீதம் வட்டியாக வசூக்கப்பட்டது..

சிறியளவில் நிலம் வைத்திருந்த விவசாயிகளுக்கு கடன் கொடுத்து விளைச்சல் இன்மையால் அவர்கள் கடன்கட்ட தவறியப்போது அவர்களது நிலங்கள் பறிக்கப்பட்டு பெரியகோவிலுக்கு சொந்தமாக்கப்பட்டன. கடனாளியான விவசாயிகளை கோவில் அடிமைகளாக்கி அவர்கள் முதுகில் சூட்டுக் கோலால் சூடு போட்டு கோவில் நிலங்களில் வேலை செய்ய வைத்தனர்.

பெரியக்கோவில் இறைதிருமேனிக்கு ராஜராஜன் அளித்தகொடை 2692 கிலோ தங்கமாகும். பெரிய கோவிலுக்கு சொந்தமான நிலங்களிலிருந்து காணிக்கடனாக ஆண்டொன்றிற்கு கிடைத்த நெல் மாத்திரம் ஒரு லட்சத்து 20 ஆயிரம.; கலம் ஆண்டொன்றுக்கு கோவிலுக்கு வந்த வருவாயில் நெல் தவிர பொன்,களஞ்சு 2000 காசுகள். இதனை நோக்குகையில் நாட்டின் ஒட்டுமொத்த செல்வமுமே பெரியகோவிலில் குவிக்கப்பட்டிருந்தது. இவற்றை நிர்வாகம் செய்வதற்கு என நான்கு பண்டாரிகள,; 116 பரிசாரர்கள்,06 கணக்கர்கள்,12 கீழ்க்கணக்கரகள்,பணிபுரிந்தனர். கோவிலுக்கு நெல்லும் பொன்னும் கட்டாயமாக தரவேண்டும் என 57 கிராமங்களுக்கு ராஜராஜசோழன் உத்தரவிட்டான்.

அன்றாட கோவில் செயற்பாடுகளை இயக்குவதற்கான இலவச உழைப்பும் மக்களிடம் இருந்தே பெறப்பட்டது. இக்கோவிலுக்கு நுந்தா விளக்கு எரிப்பதற்காக 400 இடையர்கள் “சாவா மூவாப் பேராடுகள”; எனும் பெயரில் ஆடு,மாடு,எருமைகள் உரிமைகள் வழங்கப்பட்டன. “வெட்டிக்குடிகள்”; என அழைக்கப்பட்ட இந்த 400 பேரும் கோவிலுக்கு விளக்கெரிக்க நாளொன்றுக்கு நெய் கொடுக்க வேண்டும் என உத்தரவு விதிக்கப்பட்டிருந்தது. கோவிலுக்குக் கொடுத்தது போக இவர்களுக்கு ஆடு மாடுகளிருந்து கிடைத்த உபரியைதவிர வேறு சம்பளம் கிடையாது. கால்நடைகளின் எண்ணிக்கை குறையாமல் அவற்றை பராமரித்து கோவிலுக்கு நெய் அளக்கு வெட்டிக்குடிகளாக அவர்களின் உழைப்பு உறிஞ்சப்பட்டது. நெய் அளக்கத் தவறிய இடையர்களின் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

வெட்டிக்குடிகளைப் போன்றே பல பெண்கள் பெரியக்கோவில் குற்றுசாலையில் சம்பளமின்றி வேலைசெய்ய அமர்த்தப்பட்டனர். ஆனால் பிராமணர்க்கென்று வேதம் கற்க பாடசாலைகள் உணவு உறைவிட வசதிகளுடன் ஆரம்பிக்கப்பட்டு இப்பாடசாலை மாணவர்களுக்கு 06 கலம் நெல்லோடு ஒரு பொன் உபகாரச் சம்பளமாக வழங்கப்பட்டது. ஆகவே சோழர் காலம் என்பது சாதாரண நாட்டு மக்களின் உழைப்பை சுரண்டி தன் ஆட்சியை விஸ்தரித்து என மேற்குறிப்பிட்ட விடயம் மூலம் அறியலாம.; இதனை நோக்கும்போது சோழர் காலத்தைப் பொற்காலம் எனக் கூறமுடியாது.

 பிராமணர்கள் நிலவுடைமை ஆதிக்கம் கொண்டவராக விளங்கினார்கள். சாதாரண மக்களின் வாழ்க்கையை நோக்கும்போது பிராமணர்களைத் தவிர அனைத்து தரப்பினரும் தத்தம் ஊர்களுக்கு அரசு ஏற்பாடு செய்திருந்த காவலுக்கும் “பாடிகாவல் வரி” செலுத்தினர். கைத்தொழில் செய்வோர் ஒவ்வொரு தொழிலுக்கும் வரி செலுத்த வேண்டியிருந்தது.

நெசவாளர் “தறிஇறை”இ எண்ணெய் பிழிபவர்“செக்குஇறை”,தட்டார்“தட்டார்ப்பாட்டம்” தச்சர்“தச்சு இறை” வரிகளாக செலுத்தினர். அத்தோடு மக்களிடமிருந்து புறவுவரி,இரவுவரி,குடிமைவரி, திருமணவரி, போர்வரி,தசபந்தம்,முத்தாவணம்,மீன்ப்பாட்டம்,வேலிக்காசு,ஊர்க்கழஞ்சுவரி என பல வரிகளை அரசு வசூலித்த அதேநேரத்தில் ஊர்ச்சபை போன்ற அமைப்புகளும் தனியாக வரி விதித்தது. இவ்வாறு விதிக்கப்பட்ட 400க்கு மேற்பட்ட வரிகளில் பெரும்பாலானவை பிராமணர் வெள்ளாளர் சாதி தவிர்த்த பிற சாதியினருக்கு மட்டுமேயாகும்.

விவசாயிகள் விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு வரியாக செலுத்த வேண்டியிருந்தது. அவ்வரிக்கு “கடமை” என பெயரிட்டு அதன் மூலம் நெல் கொடுப்பது அவர்கள் வாழ்வில் நிரந்தரமான கடமையாக்கப்பட்டு இருந்தது. இந்த வரி செலுத்த தவறினால் நிலம் பறிக்கப்பட்டு அந்த நிலம் ஊர்க்கு பொதுவாக்கப்பட்டு ஊர்களே அதனை விற்று பணத்தை வரியாக கட்டின. மக்கள் பலர் பஞ்சத்தாலும் வறுமையாலும் வாடியுள்ளனர.; நிலங்கள் ஈவிரக்கமின்றி பறிமுதல் செய்யப்பட்டன.நிலத்தை பறித்தல்தான் அன்றைய சமூக அமைப்பின் மிகப் பெரிய தண்டனையாக இருந்தது.

சோழர்காலத்தில் அடிமைமுறை இருந்தமையும் வறுமையினால் மக்கள் தம்மை கோவிலுக்கு அடிமையாக விற்றுக்கொண்டதையும் கல்வெட்டு ஆதாரங்கள் காட்டுகின்றன. 6 பேர் பதின்மூன்று காசுக்கு பெரிய கோவிலுக்கு விற்றுக் கொண்டனர். நந்திவர்மன் மங்கலத்தில் பதிகம் பாடுவதற்காக மூன்று பெண்கள் பரிசளிக்கப்பட்டனர். திருவிடந்தை பெருமாள்கோவில் என்னும் ஊரில் அமைந்த “ஸ்ரீவராகதேவர்”; கோவிலுக்கு 12 மீனவர் குடும்பத்தினர் தங்களை அடிமையாக விற்றுக் கொண்டனர். இதேபோன்று நெசவாளர்களும் தங்களை கோவிலுக்கு அடிமையாக விற்றனர்இவ்வடிமைகள்தங்களின் தொழில் மூலம் வரும் வருவாயில் கழஞ்சு,பொன் கோவிலுக்குத் தர வேண்டும் என்றும் ஆண்டுக்கு இருமுறை வரும் கோவில் திருநாட்களில் பணிகள் செய்யவேண்டும் என்றும் கட்டளை விதித்தனர்.

 மேலும் பிராமணர்கள் அல்லாதோரின் பஞ்சாயத்து ஆதிக்கத்திலுள்ள கிராமங்களை “ஊர்கள்” என்றழைத்தனர். ஊர்களின் நில உரிமைகளை மாற்றியும், கோவிலுக்கு குடிகள் கொடுக்க வேண்டிய காணிக்கடன் அதிகரிக்கும் வகையில் ராஜராஜன் கட்டளை பிறப்பித்தான.; தங்கள் தேவைகளை சிறு அளவில் வேளாண்மை செய்து வந்தவர்களில் நிலங்கள் அவ்வப்போது ஆட்சியாளர்களால் பறிக்கப்பட்டு அவர்களை கூலியாக மாற்றியோ அல்லது குத்தகையாளர்களாக மாற்றி அவரக்ளின் நிலங்கள் கோவிலுக்கு சொந்தமாக்கப்பட்டது.அரசனுக்கும் கோவிலுக்கும் விளைநிலம் பங்கானது.

மேல்வார விளைநிலப்பங்கானது அரசனுக்கும் கோவிலுக்கும் வழங்கப்பட்டது.கீழ்வார விளைநிலம் பங்கானதுகுத்தகைதாரர்களுக்கு விடப்படும்.பின் அறிவித்துள்ள மானியங்களை உரியவர்களுக்குக் கொடுத்த பின் எஞ்சியது உழவர்களுக்கு கிடைத்தன. இது விளைச்சல் மத்தியில் பத்தில் ஒரு பங்கை விட குறைவானது. மேல்வாரமாக செலுத்தவேண்டிய விளைச்சல் ஏற்கனவே அதிகமாக இருந்ததுடன் அடிக்கடி இந்தளவு உயர்த்திக் கொண்டே போனதால் அவர்களுக்கு கிடைக்கும் பங்கு குறைந்து கொண்டேபோனது. இதனால் நில உடைமையாளர்கள் ஊரை விட்டு ஓடியுள்ளனர.;; வரி அதிகமாக அறவிட்டதால் தாங்கள் வெள்ளாமை செய்து குடி இருக்கபோவதில்லை என மன்னார்குடி மக்கள் எச்சரிக்கை செய்தனர.; அதுமாத்திரமின்றி சாகுபடி செய்யாது கிடந்த நிலங்களுக்கும் வரி அறவிட அதை வசூலிக்கத் தவறிய புன்னவாயில் எனும் ஊர்ச்சபை துண்டிக்கப்பட்டது.

ஊராந் சிலரே வரி நெல்லைக் குறைத்து அளப்பதற்கான தமது ஊர்நிலத்தில் வரி விலக்குப் பெற்றிருந்த நிலங்களின் அளவை கூடுதலாக காட்டமுயன்றனர். சொந்த நிலமுடையவர்கள் கூட தங்கள் நிலத்தை வரியில்லாநிலங்கள் எனக்கணக்கு காட்டி அனுபவித்துவந்தனர். இவ்வாறான நிலையை நோக்கும்பட்சத்தில் மக்களின் வாழ்வில் வரிப்பெரும் இடையூராக அமையப்பெற்றிருக்கும் என்றும் நிலையான வாழ்க்கை வாழவில்லை என்பது அறியக்கூடிய விடயமாகும.; இதனால் இக்காலத்தை பொற்காலம் எனக் கூறுவது ஏற்ற விடயமாக அமையாது.

சோழர்காலத்தில் சாhதிமுறை பெரும்பங்களிப்பை செலுத்தியுள்ளது. பிராமணர்கள் நிறைந்துள்ள ஊர்களில் மற்றசாதியினர் வசிக்கவோ நிலவுடைமையாளராக இருந்தாலும் அவர்களின் நிலங்களை விற்றுவிடச் சொல்லி ராஜராஜன் ஆணை பிறப்பித்;தான.; அந்நிலங்களை  ராஜராஜனின் தமக்கை குந்தவை விலைக்கு வாங்கி கோவிலுக்கு சொந்தமாக்கினாள். இவ்வாறாக பிராமணர்கள் ஊர்களில் பிராமணர்கள் இல்லாதோரின் நிலவுரிமை பறிக்கப்பட்டு அவர்கள் உழுக் கூலிகளாகத் தாழ்த்தப்பட்டனா.; இவ்வாறு கோவிலைச் சார்ந்து பிறப்பிக்கப்படும் நிலப்பறிப்பு, வரிவாதிப்பு போன்ற ஆணைகளை யாரேனும் உழவர்கள் எதிர்த்தால் “சிவத்துரோகி” எனப்பட்டம் கட்டிஅடக்கப்பட்டனர். சோழர்காலத்தில் தொழிலாளர்கள்  அனைவரும் எவ்வாறெல்லாம் துன்பப்பட்டிருக்கின்றார்கள் என்பதை புரிந்துக்கொள்ள முடிகின்றது. இதனால் சோழர்க்கால ஆட்சியானது சிறப்பற்றது என்பதை இதன் மூலம் அறியலாம்.

ராஜராஜன் 400 மேற்பட்ட  பெண்களை வலுக்கட்டாயமாக கொணர்ந்து உடம்பில் சூடுப்போட்டு “தேவரடியார்களாக” மாற்றினான். இப்பெண்கள் கோவிலின் பணிகளோடு நிரந்தரமாக பினைக்கப்பட்டனர். இறைவனின் பெயரால் விபசாரத்தை புனிதமாக்கி தஞ்சையில் தளிச்சேரியை உருவாக்கினான.; கோவில் அடிமைகலென கட்டாயப்படுத்தி இழுத்து வரப்பட்ட  இப்பெண்கள் அரசனின் அந்தபுரத்திற்கு இழுத்து செல்லப்பட்ட கொடுமைகளும் சோழப்பொற்காலத்தில்தான் நிகழ்ந்தனர். கோவில் பூசகர்கள்,பெருநிலவுடமையாளர்களின் காமவெறிக்கு பலி கொடுக்கப்பட்ட “தேவரடியார்” குலப்பெண்கள் ஆயிரம் ஆண்டுகாலக் கொடுமையை   அனுபவித்தனர்.

தமிழ் நாட்டின் கிடைத்த கல்வெட்டுக்களில் தீண்டாமைபற்றிய முதல் குறிப்பே ராஜராஜனின் ஆட்சிகாலத்தில் வந்துள்ளது. வரலாற்று அறிஞர்“ரொமிலாதாப்பர்” இவன் காலத்தில் ஊருக்கு வெளியே தீண்டாச்சேரியும்,பறைசேரியம் இருந்ததைச் சுட்டிக்காட்டியுள்ளார். ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனி சுடுகாடுகள் இருந்தன. தாழ்த்தப்பட்ட சாதி அடிமைகள் சாகுபடி நாட்களில் சகதியால் உழுவதும் மற்ற நேரங்களில் கல்லுடைப்பதும் பல்லக்கு சுமப்பதும் கட்டாயமானது. ராஜராஜனின் பொற்காலம் பற்றி பேசுவோர்கள் அவன் காலத்தில் இருந்த தீண்டாமைக் கொடுமையை பற்றியோ சாதிகளால் மக்கள் பிரிந்து கிடந்ததை பற்றியோ பேசுவது இல்லை.

கோயிலை மையமாகக் கொண்ட சோழர்க்கால அதிகார அமைப்பில் சாதிவாரிக் கடமைகளும் உரிமைகளும் வரையறுக்கப்பட்டன. பிராமணர்கள்,வெள்ளாளர்கள், நிலவுடைமை ஆதிக்கச்சாதிகள் ஒருப்புறமும் விவசாயத்தொழிலாளர்கள்,அடித்தட்டு உழைப்பாளர் மற்றும் உடைமை, உரிமையற்ற சமூக அடிமைகளாக கடைச்சாதி தீண்டதோர். என சமூகம் பிரிந்துக் காணப்பட்டது.

இவ்வாறு சோழர் ஆட்சிகாலத்தில் மக்கள் சார்ந்த அம்சங்களிலும் உரிமைகளும் அவர்களின் சுதந்திரத்தை பாதுகாப்பதிலும் கவனம் செலுத்தும் வகையில் ஆட்சிப்புரிந்த மன்னர்கள் காணப்படவில்லை. அவர்கள் சாதாரண மக்களை கொடுமைப்படுத்தி  தனது தேவைகளை நிறைவேற்றும் வகையில் ஆட்சி புரிந்தமை கவலைக்கிடமாக விடயமாகும.; மேலும் தங்களின் ஆட்சி ஸ்திரதன்மையை நிலைநாட்ட சர்வதிகாரிகளாவும் ஏதேச்சதிகாரம் கொண்ட கொடுங்கோன் ஆட்சிப் புரிந்தனர.; இத்தன்மையானது சோழர்காலத்தில் நிகழ்ந்ததால் இக்காலமானது பொற்காலம் என கூறுவது தவறூன விடயமாகும்.

இக்கால மன்னர்கள் தங்களது ஆட்சிப்பரப்பை பெருக்க மக்களின் உயிர்களை பறித்துள்ளனர.; ஏனைய காலங்களான சங்ககாலம்,சங்கமருவியகாலம், பல்லவர்காலம் அரசாட்சி சமூகம் மக்களின் வாழ்க்கை தரங்களை ஒப்பிட்டு நோக்குகையில் மக்கள் நிம்மதியாகவும் அடிமைகளாக வாழாது சுதந்திர வாழ்க்கை வாழ்ந்தனர் என வரலாற்று சான்றாதாரங்கள் மூலம் தெளிவாக அறியலாம். அக்காலங்கள் பொற்காலமென வர்ணிக்கபப்டாத நிலையிலும் அக்காலங்கள் செங்கோல் கொண்ட சிறப்பான ஆட்சியாகவே அமைந்தது. ஆனால் சோழர்காலம் மனித உணர்வுக்கு முக்கியமளிக்கவில்லை. ஆகவே இக்காலம் பொற்காலம் என ஏற்றுகொள்ள முடியாது.

மேற்குறிப்பிட்ட அனைத்து விடயங்களையும் தொகுத்து நோக்குகையில் 400 வருடங்கள் ஆட்சிபுரிந்த பெரும் வீரர்கள் என இன்றும் மதிக்கப்படும் சோழ மன்னர்கள் வியக்கக்கூடிய வகையில் கலை ஆற்றல்களை வளர்த்த போதிலும் இரக்கமற்ற முறையில் கொடுங்கோல் ஆட்சி புரிந்தனர் என்று அக்காலத்தில் காணப்பட்ட சாதிமுறை,அடிமைத்தனம,;பொருளாதாரநிலை போன்ற இன்னோரன்ன விடயங்கள் மூலம் பறைசாற்றப்படுகின்றது.

சோழர்காலம் பொற்காலம் என வரலாற்று ஆசிரியர்கள் கூறிய போதிலும் அக்கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாத தன்மையும் உள்ளது. ஏனெனில் பொற்காலம் என்ற சிறப்புகள் சோழர்களின் ஆட்சியானது உள்வாங்கப்படமாட்டாது. காரணம் அவர்களின் ஆட்சியை அக்கால மக்கள் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளாது இன்னல்களின் மத்தியில் வாழ்ந்ததேயாகும். இருப்பினும் இவ்வாறான குறைகள் காணப்பட்ட போதிலும் சோழர் காலத்தை பொற்காலமாக எண்ணி போற்றிப் புகழ்கின்றமை நிதர்சனமான உண்மையாகும்.

                        தொகுப்பு: பெருமாள் பிரமேதா

கிழக்கு பல்கலைக்கழகம்

                        மூன்றாம் வருடம்

உசாத்துணைகள்.

01           தங்கமணி.பொன்.,1992, பழங்கால இந்தியா, பொன்னையா பதிப்பகம்,            பக்:434-439.

02           நீலகண்டசாஸ்திரி, 2007, சோழர்கள் புத்தகம் – 01, நியு செஞ்சரி புக் ஹவுஸ். பக்: 229-355.

03           இராசமாணிக்கனார்.மா.,1985, சோழர் வரலாறு மூன்றாம் பாகம், éரம் பதிப்பகம், பக்: 179-243.

04           இராசமாணிக்கனார்.மா., 1946, சோழர் வரலாறு இரண்டாம் பாகம், எடுசே~ன் பப்ளி~pங் கம்பனி,பக்-94-136.

05           நீலக்கண்டசாஸ்திரி.கே.அ.,1989,சோழர்கள், INDIANCOUNCIL OF HOSTORICAL RESEARCH>gf;-466-500

06           சதாசிவபண்டாரத்தார்.டி.வி.,1954,பிற்கால சோழர்சரித்திரம் பகுதி 01,அண்ணாமலைப் பல்கலைக்கழகம். பக்-01-84

07           பத்மாவதி.ஆ.,2003, சோழர்ஆட்சியில் அரசும்மதமும், குமரன் புத்தக நிலையம்., பக்-176-182

  • https://ta.m.wikipedia.org சோழர்காலம
  • https://yarl.com>forum3>topic Nrhou;fhyk;.

08           hவவிள:ஃஃவய.அ.றமைipநனயை.ழசப சோழர்காலம.;

09           hவவிள:ஃஃறறற.யஅயணழn.inஃஉhழடயச- எயசயடயசர.

10           hவவிள:ஃஃலயசட.உழஅ,கழசரஅ3,வழிiஉ சோழர்காலம்.

11           hவவிள:ஃஃஅழசளஅயட.ழெஃவயஃளயஅகரnளெகயப-வயஅடைஃளயஅகரnகெயப-ரனெழஅளவசinநெவ-வயஅடைஃ3632-உhழடயள-hளைவழசநை.

12           hவவிள:ஃஃயசரடஅழணாipரடிடiஉயவழைளெ.உழஅஃiனெநஒ.pரிஃஉhழணாயசபயட.

13           hவவிள:ஃஃயசரபயn.றழசனிவசளள.உழஅஃ2010ஃ09ஃ19.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More