கரவெட்டியைச் சேர்ந்த (73 வயது) ஆண் ஒருவர், நேற்று (சனிக்கிழமை) மாலை உயிரிழந்துள்ளார்.
இவர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பருத்தித்துறை வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்திருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
அதேபோன்று பருத்தித்துறை, சுப்பர்மடத்தைச் சேர்ந்த (54 வயது) ஆண் ஒருவர், 2 நாட்களாக வயிட்டோட்டம் காரணமாக சுகயீனப்பட்டிருந்த நிலையில், நேற்று வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.
அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த (68 வயது) ஆண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இதன்போது சடலத்திலிருந்து மாதிரிகள் பெறப்பட்டு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை மந்திகை வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள இரண்டு சடலங்களின் பி.சி.ஆர்.பரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.