மேல் மாகாணத்தில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட இதுவரை எந்தவொரு தடுப்பூசியும் செலுத்தப்படாதவர்களுக்கும் மற்றும் தீவிர நோய்களினால் பீடிக்கப்பட்டுள்ளோருக்கு நாளை முதல் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாளைய தினம் முதல் மூன்று தினங்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
தடுப்பூசியைப் பெறவுள்ளோர் 1906 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி முற்பதிவினை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.