இளம் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு மிகப்பெரிய அறிமுகத்தை பெற்றுத்தந்த படம் அர்ஜுன் ரெட்டி. இந்தப்படத்தில் நகைச்சுவை நடிகராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த இன்னொரு நடிகர் ராகுல் ராமகிருஷ்ணா. தொடர்ந்து கீதா கோவிந்தம் படத்திலும் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்தார். சமீபத்தில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்திலும் ராம்சரனிடம் சிக்கிக்கோலும் ஜூனியர் என்டிஆரின் ஆளாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ராகுல் ராமகிருஷ்ணா. விரைவில் வெளியாகவுள்ள ராணாவின் விராட பர்வம் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தனது திருமணம் குறித்த அறிவிப்பை வித்தியாசமான முறையில் சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ராகுல். தனது வருங்கால மனைவிக்கு லிப்கிஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டு விரைவில் திருமண பந்தத்தில் இணைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவரது வருங்கால மனைவியின் பெயர், மற்ற விவரங்கள் பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை. காமெடி நடிகருக்குள் இப்படி ஒரு ரொமான்ஸ் ஆள் இருக்கிறாரா என ரசிகர்கள் தங்களது ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
வணக்கம் இலண்டன் WHATSAPPநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW