தேவையான பொருட்கள்
வறுத்து தோல் நீக்கிய நிலக்கடலை- 1 கப்,
பொடி செய்த வெல்லம்- ¾ கப்,
தண்ணீர்- ¼ கப், ஏலம்,
சுக்குப் பொடி தேவைப்பட்டால்- தலா ½ ஸ்பூன்.
செய்முறை
முதலில் வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலையை ஒரு தட்டில் தயாராக வைத்துக் கொள்ளவும்.
வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி பாகு காய்ச்சவும்.
உருட்டுப்பதம் வந்ததும் கடலையில் ஊற்றி கரண்டியால் கிளறி நெய் அல்லது அரிசி மாவு தொட்டுக் கொண்டு உருண்டை பிடிக்கவும்.
அவ்வளவு தான் சூப்பரான வேர்க்கடலை உருண்டை ரெடி.
நன்றி | மாலை மலர்