இப்போது மக்கள் தங்கள் அழகில் அக்கறை காட்டுகிறார்கள். அவர்கள் தங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும் அழகாகவும் வைத்திருக்க பல பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். முக சுத்தப்படுத்திகள் தோலில் உள்ள அழுக்குகளை அகற்ற பொதுவாகப் பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆகும். இருப்பினும், கெமிக்கல் ஃபேஷியல் க்ளென்சர்களை நீண்ட நேரம் பயன்படுத்துவது சரும செல்களை சேதப்படுத்தும்.
இதுபோன்ற சமயங்களில், கெமிக்கல் கிளென்சர்களால் முகத்தைக் கழுவுவதற்குப் பதிலாக, வீட்டில் சமையலறையில் இருக்கும் மருந்துகளைக் கொண்டு முகத்தைச் சுத்தம் செய்யுங்கள். இது உங்கள் சருமத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலுமாக நீக்கி, உங்கள் நிறத்தை மேம்படுத்தி, உங்கள் முகத்தை பிரகாசமாகவும் பொலிவாகவும் மாற்றுகிறது. இப்போது ஃபேஸ் வாஷுக்குப் பதிலாக உங்கள் முகத்தைச் சுத்தப்படுத்த நீங்கள் பயன்படுத்தக்கூடிய பிற பொருட்களைப் பார்ப்போம்.
பால்
உங்கள் முகத்தில் அழுக்குகள் நிறைய இருந்தால், காய்ச்சாத பாலைக் கொண்டு முகத்தை சுத்தம் செய்யுங்கள். இது சருமத் துளைகளின் ஆழத்தில் உள்ள அழுக்கை வெளியேற்றும். அதற்கு பஞ்சுருண்டையில் பாலை நனைத்து, முகத்தைத் துடைத்து, நன்கு காய்ந்த பின், நீரில் நனைத்த சுத்தமான காட்டன் கொண்டு துடைத்தெடுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், சருமத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
ரோஸ் வாட்டர்
முகத்தில் உள்ள அழுக்கை நீக்க ஒரு நாளைக்கு 2-3 முறை ரோஸ் வாட்டர் கொண்டு முகத்தை துடைத்தெடுங்கள். அதற்கு பஞ்சுருண்டையில் ரோஸ் வாட்டரை நனைத்து முகம் மற்றும் கழுத்தை துடைத்து எடுக்க வேண்டும். இதைப் பயன்படுத்தினால் சோப்பு, ஃபேஸ் வாஷ் என்று எதையும் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது.
வெள்ளரிக்காய்
நீங்கள் உங்கள் முகத்தில் ஃபேஸ் வாஷ் அல்லது சோப்பு பயன்படுத்த விரும்பவில்லையென்றால், வெள்ளரிக்காய் சாற்றினை முகத்தில் தடவி மசாஜ் செய்து, பின் ஈரமான பஞ்சுருண்டை கொண்டு துடைத்து எடுங்கள். இல்லாவிட்டால் வெள்ளரிக்காயை துருவி சிறிது தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவுங்கள்.
மூன்றாண்டுகளாக பதுங்கியிருந்த பயங்கரவாதி பிடிபட்டான்..!!
முகப்பரு இருக்கும் போது பேசியல் செய்யலாமா?
லெக் ரோவிங் (Leg rowing)
பேஸ்புக், வட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உலகளாவிய ரீதியில் முடங்கியது ஏன்?
தயிர் மற்றும் தேன்
முகத்தில் உள்ள அழுக்கை நீக்க தேன் மற்றும் தயிரைப் பயன்படுத்தலாம். இது முகத்தில் உள்ள அழுக்கை நீக்குவதோடு, முகத்திற்கு பொலிவை தருகிறது. அதற்கு 1 டீஸ்பூன் தயிரில் சிறிது தேன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 5 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தைத் துடைத்து எடுக்க வேண்டும்.
தக்காளி
தக்காளியும் சருமத்தில் உள்ள அழுக்கை போக்க உதவும். அதற்கு தக்காளியின் ஒரு துண்டை எடுத்து முகத்தில் சிறிது நேரம் தேய்த்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இச்செயலின் மூலம் சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் வெளியேற்றப்பட்டு, முகம் பொலிவோடு இருக்கும்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கும் சரும அழுக்கை நீக்க உதவும். அதற்கு உருளைக்கிழங்கு துண்டு அல்லது துருவிய உருளைக்கிழங்கை எடுத்து, முகத்தில் சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் ஈரமான பஞ்சுருண்டையால் துடைத்து எடுக்க வேண்டும்.
நன்றி | Tamilbeauty