தக்காளியில் உள்ள லைகோபீன் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் இதய நோய் மற்றும் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும்.
வைட்டமின் சி, பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் வைட்டமின் கே ஆகியவற்றின் சிறந்த மூலமாக இருக்கும் தக்காளியின் நிறம் சிவப்பு தவிர, மஞ்சள், ஆரஞ்சு, பச்சை என ஊதா உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களிலும் உள்ளது .
தக்காளியின் பல கிளையினங்கள் வெவ்வேறு வடிவங்களையும், வழக்கமாக நாம் உண்ணும் தக்காளியின் சுவையில் இருந்து மாறுபட்ட சுவையிலும் தக்காளிகள் விளைகின்றன.
காணப்படும் சத்துக்கள்
தக்காளியில் சுமார் 95% நீர்ச்சத்து உள்ளது, எஞ்சிய 5% சத்துக்களில் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. எனவே, தக்காளி நார்ச்சத்துக்கான நல்ல மூலம் என்று சொல்லப்படுகிறது.
வைட்டமின் சி ஊட்டச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்பைக் கொண்ட தக்காளியில் பொட்டாசியம், வைட்டமின் கே1 ஆகியவை உள்ளன.
ஃபோலேட் (வைட்டமின் B9) கொண்ட தக்காளி, சாதாரண திசு வளர்ச்சிக்கும் செல் செயல்பாட்டிற்கும் முக்கியமானது.
கர்ப்பிணிப் பெண்களுக்கு இது மிகவும் முக்கியமான வைட்டமின் பி 9 சத்து கொண்ட சுலபமான உணவுப் பொருள் தக்காளி ஆகும்.
வைட்டமின் ஏ அதிகமாக அடங்கியுள்ளதால் கண் பார்வையை மேம்படுத்தும் சக்தி கொண்டுள்ள தக்காளி, மாலைக்கண் வியாதியைத் தடுக்கும் ஆற்றலும் தக்காளிக்கு உண்டு.
தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. அதனை தொடர்ந்து சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது. உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாக்க உதவுகிறது. பசியைத் துண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளை தக்காளி கட்டுப்படுத்துகிறது.
எனவே, உணவை அதிக அளவு சாப்பிடுவது தடுக்கப்பட்டு உடல் எடை அதிகரிப்பதில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேலும், தக்காளி நமது சருமத்தில் உள்ள மைட்டோகாண்ட்ரியல் என்ற மரபணுவை பாதுகாப்பதால், சரும ஆரோக்கியம் மேம்படுவதுடன் சருமத்தின் வயதாகும் தன்மையும் மட்டுப்படுகிறது. எலும்புகளையும் பற்களையும் வலுவாக்கும் தக்காளி, அழகையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கும் ஒரு அற்புதமான கனி ஆகும்.
நன்றி | தமிழ் நியூஸ்