கொரோனாவின் கோரப்பிடியில் தப்பியபோதும் பணவீக்கத்தால் உலக நாடு அவதிப்படும் நிலையில் 40 வருடகாலங்களின் பின் மீண்டும் பணவீக்கத்தின் பிடியில் சிக்கியது ஜப்பான்
பல நாடுகளிலும் பொருளாதார நெருக்கடியால் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் இது வட்டி விகிதத்தினை அதிகரிக்க தூண்டியுள்ளது.
ஜப்பானின் முக்கிய நுகர்வோர் பணவீக்க விகிதமானது, கடந்த அக்டோபர் மாதத்தில் உச்சம் தொட்டுள்ளது.
ஜப்பானில் நிலவி வரும் இந்த மோசமான நிலைக்கு மத்தியில் யென் மதிப்பானது மிக மோசமான சரிவினைக் கண்டுள்ளது.
ஜப்பான் நிறுவனங்கள் பலவும் பணவீக்கத்தினால் பெரும் அழுத்தத்தினை எதிர்கொண்டுள்ளன.
சர்வதேச அளவில் உணவு மற்றும் எரிபொருள் விலையானது உச்சத்தில் காணப்படும் நிலையில், ஜப்பானின் சிபிஐ விகிதமானது பல வருடங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது.