90 களின் காலம் அது ஒரு வசந்த காலம் கம்ப்யூட்டர் என்ற ஒற்றை வார்த்தை உலகையே உலுக்கியது என்றே சொல்லலாம். இது எவ்வாறு செயல்படுகிறது. இதனை பயன்படுத்தி என்னென்ன செய்யலாம் என்பது போன்ற பல்வேறு கம்ப்யூட்டர் தொடர்பான தொழில்நுட்பத்தினை பற்றி அறிந்து கொள்வதற்கும் இதன் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவு அப்போதைய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் இந்த கம்ப்யூட்டர் குறித்த ஆர்வம் என்பது மிகுதியாக காணப்பட்டது. இதன் விளைவாக புதிய தொழில்நுட்ப உத்திகள் புகுத்தப்பட்டு தொழில்நுட்பம் சார்ந்த பல்துறை நிறுவனங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் முளைக்கத் துவங்கின. இப்போது போன்ற தொழில்நுட்ப வளர்ச்சி அக்காலத்தில் இல்லை என்றாலும் காலத்திற்கு ஏற்ற போல் வளர்ச்சி இருக்கத்தான் செய்தது. அக்கால தகவல் தொடர்பில் முக்கிய அம்சம் வகித்தவை பத்திரிகைகள் வானொலி தொலைக்காட்சிகள் அதன் பின் தான் கம்ப்யூட்டர் என்ற ஒற்றை வார்த்தை உலகத்தை திருப்பி போட்டது.
அந்த அளவிற்கு மனிதனின் வாழ்வியல் சூழலில் ஒன்றாய் மாறும் என்பதை அப்போது யாரும் ஊகித்து இருக்க முடியாது. மேலும் கம்ப்யூட்டர் என்பது படிப்படியாக அரசு மற்றும் தனியா நிறுவனங்களில் அலுவலக பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்பட்டது. பல பேர் செய்யும் வேலைகளை இது எளிதில் செய்து முடிக்கும் எனவும் இதனால் அலுவலகத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் நாட்டில் வேலை வாய்ப்பின்மை அதிகரிக்கும் வறுமைக்கோட்டு விகிதாச்சாரம் உயரும் என கூறி பல இடங்களில் பிரச்சனைகள் வெடிக்க துவங்கின. அக்காலத்தில் ‘ஏய் மாப்ள கம்ப்யூட்டர் படிப்பு படிச்சிருக்காரு பெரிய ஆள் தான் பா இவரு’ எனக்கூறி திருமணங்கள் பல நடைபெற்றன. இத்தகைய வளர்ச்சியினை அன்று இளைஞர்கள் கொண்டாடினார்கள். ஏன் என்றால் யாரும் எதிர்பார்க்கிறாத சம்பளம் சமுதாயத்தில் இவர்களுக்கென தனி மரியாதை என இருந்தது. இதனாலே பல இளைஞர்கள் இத்தகைய கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை கற்பதற்கு ஆர்வம் காட்டினர். ஆனால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக அன்றைய காலகட்டங்களில் உலகம் முழுவதிலும் வேலைவாய்ப்பின்மை என்பது மிகவும் அதிகரித்து காணப்பட்டது. அதற்கு காரணம் இந்த கம்ப்யூட்டர் வந்தது தான் என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இது எந்த அளவிற்கு உண்மை சற்று கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.
எனக்கு 100 இளைஞர்களை தாருங்கள் நாட்டினை வல்லரசு ஆக்கி காட்டுகிறேன் என்றார் சுவாமி விவேகானந்தர். அந்த அளவிற்கு மனித வளம் என்பது மிக முக்கிய காரணியாக பார்க்கப்படுகின்றது. எந்த ஒரு நாடு மனித வளத்தை முழுமையாக பயன்படுத்துகின்றதோ அதுவே வளர்ச்சியின் அறிகுறிகளாக பார்க்கப்படுகின்றது. அந்த அளவிற்கு மனித ஆற்றலின் பங்கு மிகவும் இன்றியமையாதது. இவ்வாறான சூழலில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் தேவையும் இன்றியமையாததாக பார்க்கப்படுகின்றது. மாதம் மும்மாரி மழை பெய்கிறதோ இல்லையோ அந்த விண்ணிலே போய் ஆராய்ச்சி செய்யும் அளவிற்கு காலங்கள் மாறி கொண்டு இருக்கின்றன. கணினியின் தோற்றமும் வளர்ச்சியும் இவ்வுலகை ஒரு சிற்றூராக மாற்றி விட்டது என்றே சொல்லலாம். முந்தைய காலங்களில் ஒரு விஷயத்தில் தெளிவு வேண்டும் என்றால் அல்லது தகவல் தேவைப்பட்டால் நூலகத்திற்கு சென்று அது தொடர்பான புத்தகங்களை படித்து ஆராய்ந்து அதன் பின் தான் முடிவு செய்வார்கள். ஆனால் இந்த கம்ப்யூட்டர் வளர்ச்சிக்கு பின் அது தலைகீழாய் மாறிப்போனது. நமக்கு தேவையான தகவல் அனைத்தும் அறிந்து கொள்ளும் வசதி ஒவ்வொருவரின் கைகளிலும் வந்து விட்டது. அந்த அளவிற்கு இணையத்தின் வளர்ச்சி அதிகரித்துள்ளது.
இன்று இணையம் என்பது உலகின் மிகப்பெரிய சக்தியாக மாறி இருக்கின்றது. இதன் மூலம் நமக்கு தேவையான தகவல்களை சர்ச் எஞ்சின் எனப்படும் தேடு பொறி மூலம் பெற முடியும் இதன் அடிப்படையில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும்பங்கு ஆற்றுகின்றன. இவ்வாறான நிலை இருக்க யாரும் எதிர்பாராத திருப்பமாய் புதிய தொழில்நுட்பம் ஒன்று உருவாகி அது உலகையே உலுக்கி கொண்டிருக்கின்றது. அதுதான் சாட்-ஜிபிடி என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகம் முழுவதிலும் இது மிக வேகமாய் பரவி வருகின்றது. ஒவ்வொரு நாளும் இதனை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இது தொழில்நுட்பத்தின் சிறிய ட்ரெய்லர் தான் இதன் மூலம் நாம் கற்பனைக்கு எட்டாத விஷயங்களை கூட செய்ய முடியும் என சொல்கிறார்கள். இது உண்மையிலே தொழில்நுட்ப உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துமா இதனை யார் உருவாக்கியுள்ளார்கள்? இதனை பயன்படுத்தி என்ன செய்ய முடியும்? இதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன என்பதை பற்றி பார்ப்போம். CHAT-GPT AI Generative Pre-trained Transformer,”. Artificial intelligence என்பதன் விரிவாக்கமே இதனை உருவாக்கியது.
open AI எனப்படும் எலான் மாஸ்கின் நிறுவனம், இதில் மைக்ரோசாப்ட் நிறுவனம் மற்றும் அமேசான் ஆகிய இரு நிறுவனங்கள் இதில் முதலீடு செய்துள்ளன குறிப்பாக மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்திய மதிப்பில் 80 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இதற்கு காரணம் தொழில்நுட்ப உலகில் முடி சூடா மன்னனாக இருக்கும் கூகுள் நிறுவனத்திற்கு கடிவாளம் போடுவதற்காகவே இதனை துவங்கியுள்ளனர். இதன் மூலம் கூகுள் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட முடியும் என நினைக்கின்றனர். அதேபோல எலான் மாஸ்க்ன் டெக்ஸ்லா நிறுவனம் தயாரித்து உள்ள காரில் கூகுள் மேப் உள்ளிட்ட சில அப்ளிகேஷன்களை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் ஒரு காலத்தில் தொழில்நுட்ப உலகில் கொடிகட்டி பறந்த பில்கேட்ஸ் அவர்களின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வளர்ச்சியினை தடுத்து நிறுத்தியது google நிறுவனம் அதே போல மொபைல் ஃபோன்களில் கூகிள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டுக்கு மாற்றாக தனது விண்டோசை கொண்டு வர நினைத்தது மைக்ரோசாப்ட் நிறுவனம் கடைசியில் அது தோல்வியில் முடிந்தது. இவ்வாறான சரிவுகளை சரி கட்டவும் கூகுள் நிறுவனத்திற்கு பாட புகுத்தவும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தயாராக இருப்பதாக தொழில்நுட்பம் சார்ந்த வல்லுநர்கள் கூறுகின்றனர்
சாட்-ஜிபிடி என்பது ஒரு ரோபோ என்று யூகித்துக் கொள்ளலாம். எப்படி நமக்கு தேவையான தகவல்கள் இணையம் மூலம் கிடைக்கின்றதோ அதேபோல நமக்குத் தேவையான வற்றை கேட்டாலே அதற்கான பதிலை சொல்வது மட்டுமல்லாமல் அதற்கான விளக்கத்தையும் அளித்து நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இந்த தொழில்நுட்பம் குறிப்பாக தீர்க்க முடியாத கணக்கீடுகள் நொடிப் பொழுதினில் தீர்க்கப்பட்டு அதற்கான தீர்வையும் அளிக்கிறது. ஆச்சரியமூட்டும் வகையில் இருக்கின்றன. இவற்றை பயன்படுத்தி மாணவர்கள் தங்களின் சந்தேகங்கள் மற்றும் கல்வியியல் சார்ந்த அனைத்திற்கும் உடனடியாக பதில் பெறலாம். இதனை பயன்படுத்துவதன் மூலம் சிந்தித்து பதில் எழுத வேண்டும் என்ற சிந்தனையே வராமல் போகும் மாணவர்களின் திறன்களை ஆசிரியரால் மதிப்பீடு செய்ய முடியாது. மேலும் மென்பொருள் நிறுவனங்களில் வேலை பார்க்கும் சாப்ட்வேர் இன்ஜினியர்களை கொண்டு கோடிங் எனப்படும் சாப்ட்வேர் டெவலப்மென்ட் பணிகளை இந்த சாட்-ஜிபிடி மூலம் நொடிப்பொழுதினில் செய்து முடிக்க முடியும். இதனால் இத்துறை நம்பி இருக்கும் ஊழியர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்படுகிறது. இந்த சாட்-ஜிபிடி யின் வளர்ச்சி தொழில் பற்றி நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களின் மத்தியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
எப்போதெல்லாம் ஒரு புதிய தொழில்நுட்பம் வளர்ச்சி அடைகின்றதோ அதைப் பற்றி மட்டுமே யோசிக்கின்ற பழக்கம் நம்மிடம் உள்ளது. இவற்றில் உள்ள குறை நிறைகள் பற்றிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மனிதன் செய்யும் வேலைகளை விட இது மிக அதிக வேலைகளை செய்யும் மனிதனுக்கு மாற்றாக இது எதிர்காலத்தில் இருக்கும் எனக் கூறப்படுகின்றது. இணையத்தை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் ஒன்றை நாம் பார்த்திருப்போம். அது I am not robot என்ற வார்த்தை அது எதற்காக வருகின்றது. இந்த கம்ப்யூட்டரை பயன்படுத்துவது மனிதனா அல்லது ரோபோவா என உறுதி செய்ய சொல்லும் மனிதன் என்பதை உறுதி செய்த பின்னரே அந்த இணைய தளத்தை முழுவதுமாக பயன்படுத்த முடியும். ஏனென்றால் மனிதன் மூளை திறன் என்பது வேறு ரோபோக்களின் மூளை திறமை என்பது வேறு இதன் மூலம் இணையதளம் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் மோசடிகளை தடுத்து நிறுத்துவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் சாட்-ஜிபிடி போன்ற நுண்ணறிவு தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வருவது மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக கூறுகின்றனர்.
தொழில்நுட்பம் சார் வல்லுநர்கள்,2021 ஆம் ஆண்டு லண்டனை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் உலகம் முழுவதிலும் சாட்-ஜிபிடி யால் ஏற்பட போகும் மாற்றம் என்ற தலைப்பில் அவர்கள் வெளியிட்ட ஆய்வறிக்கையில் ஒட்டுமொத்த தொழில்நுட்ப உலகம் இனி சாட்-ஜிபிடி மூலம் தான் என நினைப்பது தவறு. சைபர் தாக்குதல்கள் குறித்து கவலை தெரிவித்துள்ள இந்த நிறுவனம் தாக்குபவர்கள் யார் என்றே தெரியாமல் பல கோடிகளை இழக்கும் அவலம் இந்த கம்ப்யூட்டர் தொழில் நுட்பதில் தான் உள்ளது. இதனால் பல நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றால் போல் இத்தகைய தாக்குதல்கள் நடைபெறுகின்றன. பெரும்பாலான தாக்குதல்கள் முறையற்ற வகையில் பணம் சம்பாதிக்க நடைபெறுகின்றன.
இவ்வாறான சூழ்நிலைகளை சமாளிக்க மனித சக்தி என்பது தேவைப்படுகிறது. மேலும் அனைத்து துறைகளிலும் சாட்-ஜிபிடி பொருத்தமாக அமையாது. ஒரு திரைப்பட காட்சியில் ரோபோ அந்த டிவியை போடு என சொல்வார்கள். உடனே அந்த ரோபோ அந்த டிவியை கீழே போட்டு உடைத்து விடும் இப்படி சொன்னா இது இப்படித்தான் செய்யும் டிவி ஆன் பண்ணு என்ன சொல்லணும் என்று சொல்வார்கள். இதுதான் தற்போதைய நிலை நாம் ஒன்றை சொன்னால் அது ஒன்றை செய்வது இதனால் ஏற்படும் தேவையற்ற பிரச்சனைகள் இந்த தொழில்நுட்பத்தில் உள்ளன மனித மூளை என்பது மிகவும் மகத்தானது சக்தி வாய்ந்தது. ஆனால் தற்போது வந்துள்ள சாட்-ஜிபிடி என்பது செயற்கை நுண்ணறிவே தவிர வேறு ஒன்றும் இல்லை எனவே சாட்-ஜிபிடி யால் ஒட்டுமொத்த வேலை வாய்ப்பு பறிபோகும் எனக் கூறுவது தவறு. இதனைப் பற்றிய புரிதல் என்பது நமக்கு வேண்டும் ஒரு புகழ்பெற்ற கிரேக்க பழமொழி என்ன சொல்கிறது.
என்றால் இவ்வுலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் ஒன்றை ஒன்று தொடர்புடையது என்கிறது. அப்படி பார்த்தால் காலத்திற்கு ஏற்ப வளர்ச்சியும் இன்றியமையாத்தக பார்க்கப்படுகின்றது. ஒரு நிறுவனம் வளர வேண்டும் என்றால் புதிய உத்திகளை காலத்தை கேட்ப பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதற்கேற்றால் போல் நாமும் நம்மை தயார் படுத்திக் கொண்டு நம் திறனை வளர்த்துக் கொண்டால் நம்மை எந்த ஒரு சக்தியாலும் ஒன்றும் செய்ய முடியாது. என்பது தான் உண்மை எனவே வரும் காலங்களில் இந்த சாட்-ஜிபிடி போன்ற பல தொழில்நுட்பங்கள் வளர்ந்து கொண்டே தான் இருக்கும். இதனைப் பற்றி கவலை கொள்ளாமல் நமக்கான திறமைகளை வளர்த்துக் கொண்டால் எத்தகைய சக்தியாலும் நம்மை அசைத்துக் கூட பார்க்க முடியாது.
மானோஜ் சித்தார்த்தன்