ஒருபிரஜையின் பேச்சுசுதந்திரத்தினை வெட்கக்கேடான விதத்தில் மீறும்மற்றுமொரு செயலாக மேடையில் தெரிவித்த நகைச்சுவைக்காக நகைச்சுவை கலைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கு முன்னர் கொழும்பு விமானநிலையத்தில் வைத்து சிஐடியினரால் அவர் கைதுசெய்யப்பட்டார்.
கொழும்பின் பிரபல பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் போது அவர் பௌத்தத்தை அவமதிக்கும் விதத்தில் கருத்து தெரிவித்தார் என பொலிஸாருக்கு சமீபத்தில் முறைப்பாடு கிடைத்திருந்தது.பௌத்தத்திற்கு எதிரான கருத்திற்காக சர்ச்சைக்குரிய போதகரை கைதுசெய்யப்போவதாக பொலிஸார்அறிவித்து சில நாட்களில் இந்த கைதுஇடம்பெற்றுள்ளது.
இந்த விடயங்கள் குறிப்பாக இனமத சிறுபான்மையினத்தவர்களை இலக்கும்வைக்கும் நடவடிக்கைகள் தற்போது திட்டமிட்ட அடிப்படையில் இடம்பெறுகின்றன.
குரோதத்தை தூண்டும் பேச்சுகள் தொடர்பான சட்டங்கள் இலங்கையில் மிகவும் தெரிவு செய்யப்பட்ட விதத்தில் பின்பற்றப்படுகின்றன ,இந்த போக்குகள் சட்டங்கள் சிறுபான்மையின சமூகத்தவர்களை அச்சுறுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டதை காண்பிக்கின்றன – அதேவேளை பெரும்பான்மை சிங்கள பௌத்தர்கள் அவர்களது மதகுருமார்,அரசியல்தலைவர்கள் தண்டனையின்பிடியிலிருந்துவிடுபட்ட நிலையில் வன்முறைகளை தூண்டுவதுடன் குரோதபேச்சுக்களை பரப்பிவருகின்றனர்.
துன்பம்தரும் விதத்திலும் முரண்நகையாகவும் , கருத்துசுதந்திரம், ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் -மனச்சாட்சி- மற்றும் மத மற்றும் நம்பிக்கைகளிற்கான சுதந்திரம் ஆகியவற்றை உள்ளடக்கிய பிரஜைகளின் சிவில் அரசியல் உரிமைகளை நிலைநிறுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட 2007 ம் ஆண்டின் ஐசிசிபிஆர் சட்டமே இவ்வாறான நடவடிக்கைகளிற்காக பயன்படுத்தப்படுகின்றது.
ஐசிசிபிஆரும் ஐசிஈஎஸ்சிஆரும் சர்வதேச மனித உரிமை சட்டத்தின் அடிப்படைகளை வழங்கும் சர்வதேச உரிமைகள் சட்டம் என அழைக்கப்படுகின்றன.1966 இல் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அங்கீகரித்த இந்த இரண்டும் 1948ம் ஆண்டின் மனித உரிமைகளின் உலகாளவிய பிரகடனத்தை உறுப்புநாடுகள் ஏற்றுக்கொண்டு பி;ன்பற்றவேண்டும் என்ற நிலையை உருவாக்கின-மேலும்இவை பின்னர் பல உள்நாட்டு சர்வதேச சட்டங்களிற்கு அடிப்படையாகவும் மாறினா.
இலங்கை 1980 இல் ஐசிசிபிஆரை அங்கீகரித்தது,இறுதியாக அதன் கடப்பாடுகளை உள்வாங்கி புதிய சட்டத்தினை உருவாக்கியது.
ஐசிசிபிஆர் என்பது அதற்கான வரைவிலக்கணத்தின் அடிப்படையில் குடிமக்களின் உரிமைகளை மேம்படுத்தும் ,அரசின் அதிகப்படியான கட்டுப்பாடுகளில் இருந்துமக்களை பாதுகாக்கும் ஒரு சாதனமாகும்.
இலங்கையில் ஐசிசிபிஆர் என்பது மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான கருத்துக்களை அமைதியாக வெளியிடுவதை உறுதிப்படுத்துவதற்கான சட்டமாக காணப்படுகின்ற போதிலும் கருத்துக்களை முடக்குவதற்கும் குடிமக்களை பயமுறுத்துவதற்கும் -குறிப்பாக சிறுபான்மையினர் எதிர்கட்சியினர் மனித உரிமை ஆர்வலர்களிற்கு எதிராக இந்த சட்டம் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த சட்டம் தேசிய இன மத வெறுப்பை பரப்புரை செய்து அதன் மூலம் பாகுபாடு விரோதம் அல்லது வன்முறையை தூண்டுதல்ஆகியவற்றை குற்றமாக்குவதற்கான ஏற்பாடுகளை கொண்டுள்ளது.
இந்த சட்டத்தில்காணப்படும் ஏற்பாடுகளை பயன்படுத்துவது பௌத்தமதத்திற்கு எதிரான அவமதிப்புகளிற்கானதாக அதிகளவில் காணப்படுகின்றது.
ஐசிசிபிஆர் சட்டம் பயன்படுத்தப்பட்டிருக்கவேண்டும் ஆனால் பயன்படுத்தப்படாத சந்தர்ப்பங்கள் கவலையளிக்கின்றன,2014இல் பொதுபலசேனாவை சேர்ந்த பௌத்தமதகுருமார் களுத்துறையில் வன்முறைகளை தூண்டினார்கள் என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் காணப்பட்டபோதிலும் ஐசிசிபிஆரின் கீழோ அல்லது வேறு எந்த சட்டங்களின் கீழோ எந்த கைதும் இடம்பெறவில்லை.
வரைவாளர்களின் நோக்கங்கள் உரியபரிசீலனைக்கு உட்படுத்தப்படவேண்டும்,என்பது சட்டத்தை விளக்குவதில் ஒரு அடிப்படை கொள்கையாகும்.
ஐசிசிபிஆரை பொறுத்தவரை சட்டமாஅதிபரும் பொலிஸாரும் அடிப்படை கொள்கைகளை கேலிக்கூத்தாகியுள்ளனர்.
சர்வதேச உடன்படிக்கையோ அல்லது உள்ளுர் சட்டமோ தனிநபர்கள் சிறுபான்மைகுழுக்கள் அல்லது அரசியல் எதிரிகளின் உரிமைகளை குறைக்க கடுமையான மற்றும் தெரிவு செய்யப்பட்ட முறையில் பயன்படுத்தப்படுவதை நோக்கமாக கொண்டதில்லை.
ஆனால் இதுதான் நடக்கின்றது.ஐசிசிபிஆர் சட்டத்தை தெரிவு செய்த முறையிலும் துஸ்பிரயோகம் செய்யும் விதத்திலும் பயன்படுத்துவதை உடனடியாக கைவிடவேண்டும்.
பொருளாதார நெருக்கடியினால் மேலும் தீவிரமடையும் இனமத பிளவுகளை நோக்கி இலங்கை நகர்ந்துகொண்டிருக்கின்றது.
இனமத மோதல்களை தூண்டுவது சிலருக்கு நன்மைகளை கொண்டுவராலம்.அதிகாரத்தை கூட சிலருக்கு கொடுக்கலாம்,
எனினும் இதனால் ஏற்படக்கூடிய தீயை பாதிப்புகளை அணைப்பதற்கு பல வருடங்கள் எடுக்கலாம்.
இலங்கை துயரம்தரும் விதத்தில் தனது இரத்தக்கறை மிக்க கடந்த கால வரலாற்றிலிருந்து இன்னமும் பாடங்களை படிக்கவில்லை.
ரஜீபன்