போர் நிறுத்தம் என்பது தற்போது சாத்தியம் அற்றது என்று புடின் திட்டவட்டமாக கூறி விட்டார். அதற்கு அவர் விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.
ரஸ்யாவுடன் போர் நிறுத்தம் தொடர்பில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் ஆபிரிக்க தலைவர்கள், ரஸ்ய அதிபர் புடின் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்பேச்சு வார்த்தையின் பின் செய்தியாளர்களை சந்தித்த புடின் சில முக்கிய விடயங்களை தெளிவு படுத்தினார்.
உக்ரைனில் அமைதிக்கு ஒரு அடிப்படையாக இருக்கலாம், ஆனால் உக்ரைன் தாக்குதல் நடத்துவதால் அந்த அமைதி முயற்சியை செயல்படுத்துவது கடினம் என்றார்.
‘இந்த அமைதி முயற்சியின் விதிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அதில் செயல்படுத்த கடினமாக அல்லது சாத்தியமற்ற விஷயங்களும் உள்ளன.
இந்த முன்முயற்சிகளில் ஒன்று போர் நிறுத்தம். ஆனால் உக்ரைன் தரப்பு பெரிய அளவிலான தாக்குதல் நடவடிக்கையை செயல்படுத்துகிறது.
தாக்குதலுக்கு உள்ளாகும்போது எங்களால் போர் நிறுத்தத்தை அமல்படுத்த முடியாது’ என்று புடின் குறிப்பிட்டார்.
அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்குவது குறித்த கேள்விக்கு பதிலளித்த புடின், “நாங்கள் அமைதி பேச்சுவார்த்தையை நிராகரிக்கவில்லை. ஆனால் இந்த செயல்முறை தொடங்குவதற்கு, இரு தரப்பிலும் உடன்பாடு இருக்க வேண்டும்” என்றார்.