இங்கிலாந்து இளவரசி ஹேன், எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் 10 முதல் 13 வரை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார் என இலங்கை வெளி விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75ஆவது ஆண்டு நிறைவு விழா தொடர்பான நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இளவரசி ஹேன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் இலங்கை வெளி விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு இலங்கை அரசாங்கம் இளவரசிக்கு அழைப்பு விடுத்துள்ளது.