செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மலையகச் சகோதரர்கள் இருவர் யாழில் சடலங்களாக மீட்பு!

மலையகச் சகோதரர்கள் இருவர் யாழில் சடலங்களாக மீட்பு!

1 minutes read

மலையகத்தின் உடப்புசல்லாவையைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் யாழ்ப்பாணம், வடமராட்சி, பருத்தித்துறை – முனைப் பகுதியில் உள்ள களஞ்சியசாலையொன்றில் தீயில் கருகிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை கடற்றொழில் உபகரண களஞ்சியசாலையில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இருவரும் களஞ்சியசாலை சென்று கதவைப் பூட்டி விட்டு நித்திரைக்குச் சென்றபோது அதிகாலை 12.30 மணியளவில் களஞ்சியசாலை தீப்பற்றி எரிந்துள்ளது.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்க முற்பட்டபோதும், களஞ்சியசாலையில் உறக்கத்தில் இருந்த இருவரும் உடல் கருகிப் பலியானதுடன் அங்கிருந்த பொருள்களும் தீயில் எரிந்ததால் அருகில் இருந்த வாகனத் தரிப்பிடத்திலும் தீப்பரவி சேதமடைந்துள்ளது.

மலையகத்தின் உடப்புசல்லாவை, மேல் பிரிவு, பிள்ளையார் லோமண்ட் தோட்டத்தைச் சேர்ந்த சகோதரர்களான வேலாயுதம் புவனேஸ்வரம் என்ற 45 வயதானவரும், வேலாயுதம் ரவி என்ற 37 வயதானவருமே உயிரிழந்துள்ளனர்.

களஞ்சியசாலையில் இருந்த சிலிண்டர் தீ விபத்துக்குக் காரணமாக இருக்குமா எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தீப்பற்றியமைக்கான காரணம் தெரியவராத நிலையில் சம்பவம் இடத்தில் பருத்தித்துறை நீதிவான் பொன்னுத்துரை கிரிஷாந்தன், தடயவியல் பொலிஸார், பருத்தித்துறைப் பொலிஸார் ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More