“எதிர்வரும் ஒக்டோபர் மாதமளவில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக எமது கட்சியின் தலைவரான தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க களமிறங்குவார்.”
– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரான முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
இம்மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளது என்ற தகவலில் உண்மை இல்லை என்றும் அவர் கூறினார்.
முன்கூட்டியே நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதமளவில் ஜனாதிபதித் தேர்தலே நடத்தப்படவுள்ளது என்றும், அதற்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.