அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு 689 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Jean Carroll என்ற பெண்ணுக்கு இழப்பீடு வழங்க மன்ஹாட்டனில் உள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மொத்தம் 10 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்த நிலையில், தற்போது 83.3 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க உத்தரவ பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நற்பெயருக்கு களங்கம் விளைவித்த குற்றத்திற்காக 11 மில்லியன் டொலர், உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் நடந்து கொண்டதற்காகவும் பிற பாதிப்புகளுக்காகவும் 7.3 மில்லியன் டொலர், தண்டனைக்கு ஒப்பான செயலுக்கு இழப்பீடாக 65 மில்லியன் டொலர் இழப்பீடாக விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1996ல் நியூயார்க் நகர ஸ்டோர் ஒன்றில் வைத்து ட்ரம்ப் தம்மை வன்கொடுமை செய்ததாக தற்போது 80 வயதாகும் கரோல் புகார் அளித்திருந்தார்.