தேவையான பொருட்கள்
முலாம் பழம் – 1 (நடுத்தர அளவு)
எலுமிச்சம் பழச்சாறு – 1 மேசைக்கரண்டி
தண்ணீர் – 1 கப்
சர்க்கரை – ½ கப்
ஐஸ் கட்டிகள் – 8
செய்முறை
முலாம் பழத்தை சுத்தம் செய்து, அதன் மேல் தோல் மற்றும் விதைகளை நீக்கி பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.
சர்க்கரையை சிறிது தண்ணீர் சேர்த்து பாகு பதத்தில் காய்ச்சி ஆற வைக்கவும்.
பின்பு நறுக்கிய முலாம் பழம், எலுமிச்சம் பழச்சாறு, சர்க்கரை பாகு ஆகியவற்றை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
அரைத்த கலவையை காற்று புகாத கண்ணாடி போத்தலில் போட்டு நன்றாக மூடி, பிரீசரில் வைக்கவும்.
ஒரு மணி நேரம் கழித்து, முள்கரண்டி கொண்டு அதை முழுவதுமாகக் கிளறவும்.
பின்னர் அந்த முலாம் பழக் கலவையை அழகான பவுலில் போட்டு, அதன்மேல் தேன் ஊற்றி அலங்கரித்து பரிமாறவும்.