கர்நாடகாவில் கடக் மாவட்டத்தில் நரகுண்டா தாலுகாவில் உள்ள ஹுனாசிகட்டி கிராமத்தில் உள்ள பசவேஸ்வரா கோயில் அருகே அடையாளம் தெரியாத வாகனம், மோட்டார் சைக்கிள் மீது இன்று திங்கட்கிழமை (03) மோதியதில் மூன்று பேர் உயிரிழந்ததாக நரகுண்டா பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வாகனம் பைக் மீது மோதியதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றுமொருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
மோதிய வாகனம் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச்சென்றுள்ளதுடன், குறித்த வானம் எதுவென இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
இறந்தவர்கள் 36, 45 மற்றும் 40 வயதானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் பொலிஸ் அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து, விபத்துடன் தொடர்புடைய வாகனத்தை அடையாளம் காண விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அத்துடன், தகவல் தெரிந்தவர்கள் முன்வந்து விசாரணைக்கு உதவுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.