சமூக மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் டொன் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த கஞ்சிப்பான இம்ரானின் சகாக்கள் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு, வெல்லம்பிட்டிய பகுதியில் வைத்து டொன் பிரியசாத் மீது நேற்று இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றிருந்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த டொன் பிரியசாத், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தவதற்காகப் பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்நிலையிலேயே மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.