தென்மேற்கு இலண்டனில் உள்ள ட்விகன்ஹாமில் (Twickenham) சனிக்கிழமை இரவு இடம்பெற்ற கொடூரமான கத்திக்குத்து சம்பவத்தை தொடர்பில் ஒருவர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது.
ஹர்பால் சிங் ரூப்ரா (வயது 38) கடந்த சனிக்கிழமையன்று (26) எல்லர்மேன் அவென்யூவில் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டார்.
இந்தச் சம்பவத்தை அடுத்து, ட்விக்கன்ஹாமில் உள்ள எல்லர்மேன் அவென்யூவைச் சேர்ந்த ஜார்ஜ் லூகா (வயது 45) கொலைக் குற்றம் சாட்டப்பட்டு, இன்று திங்கட்கிழமை (28) விம்பிள்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.